பொது அறிவு
Published:Updated:

ஓட்டம் 10

ஓட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓட்டம்

ஓட்டம் பற்றிய விதவிதமான 10 விஷயங்களைப் பார்ப்போமா?

1. வேக ஓட்டம், குறைவு ஓட்டம், வெகுதூர ஓட்டம், தொடர் ஓட்டம், தடை ஓட்டம், பல இடர் ஓட்டம், மாரத்தான் என ஓட்ட வகைகள் பிரிக்கப்படுகின்றன. தவிர, நடைப்பயிற்சியும் ஓட்டத்தின் ஒரு வகையாகவே சொல்கிறது விளையாட்டு.

ஓட்டம் 10

2. மாரத்தான் போட்டிக்கு ஆரம்பத்தில் ஓட்டத்தின் தொலைவு நிர்ணயிக்கப்படவில்லை. நாட்டுக்கு நாடு மாறுபட்டிருந்தது. 1921ஆம் ஆண்டில் உருவாக்கிய விதிமுறையின்படி, 42.195 கிலோமீட்டர் போட்டித் தொலைவாக International Amateur Athletic Federation (IAAF) அமைப்பால் இறுதி செய்யப்பட்டது.

3. பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கிடையே நடத்தப்படும் சாக்கு ஓட்டம் (Sack race), பெரியவர்களுக்கிடையேயும் மகிழ்ச்சிக்காக நடத்தப்படுகிறது. இதில், ஸ்வீடன் நாட்டின் ஸ்டீபன் வில்டிஸ் என்பவர், 100 மீட்டர் தொலைவை 26.22 வினாடிகளில் கடந்து கின்னஸ் சாதனை படைத்தார்.

ஓட்டம் 10

4. தொடர் ஓட்டம் (Relay race) என்பதற்கு ‘அஞ்சல் ஓட்டம்’ என்றும் தமிழில் பெயர் உண்டு. தரையில் மட்டுமன்றி நீச்சலிலும் இந்த முறையைப் பின்பற்றி போட்டிகள் நடைபெறுகின்றன.

ஓட்டம் 10

5. நம் உடல் முழுவதும் 5-6 லிட்டர் ரத்தம், ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும். உடல் இயக்கங்கள் அனைத்துக்கும் ரத்த ஓட்டமே முதன்மைப் பங்காற்றுகிறது. இந்த ஓட்டம் குறைந்தால், காய்ச்சலில் தொடங்கி உறுப்புகளின் பாதிப்புகள் வரை பல்வேறு உடல்நலக் குறைகள் உண்டாகும்.

6. மாடப்புறா என்றதும் வீட்டின் மொட்டை மாடியிலோ, கோயில்களிலே அழகாகத் தத்தித் தத்தி நடக்கும் காட்சிதான் நினைவுக்கு வரும். ஆனால், ஒட்டுமொத்த வேகமான உயிரினங்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறது இந்தப் பறவை. மணிக்கு 148.9 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது மாடப்புறா.

ஓட்டம் 10

7. டிராகுலா எறும்பு (Dracula Ant), மணிக்கு 321.8 கிலோமீட்டர் வேகத்தில் தனது தாடையை அசைக்கிறது. அதாவது, நாம் ஒருமுறை கண் சிமிட்டுவதைவிட 5,000 மடங்கு அதிகமாம். இதை ஓட்டத்துடன் ஒப்பிட்டால், மணிக்கு 200 கிலோமீட்டர். அதாவது, சிறுத்தையின் வேகத்தைவிட அதிகம் என்கிறார்கள்.

ஓட்டம் 10

8. இந்தியாவில் ரயில்களின் இயக்க ஓட்டம், சராசரியாக மணிக்கு 60 கிலோமீட்டர். இந்தியாவின் அதிவேக ரயிலான, ‘டிரெய்ன்18’, மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.

ஓட்டம் 10

9. ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,792.458 மீட்டர். 1630ஆம் ஆண்டில் கலீலியோ ஒரு லாந்தர் விளக்கு மற்றும் உதவியாளருடன், மலைக்குன்றில் ஆய்வுசெய்து தொடங்கிய விஷயம், பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு 1983ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட்டது.

ஓட்டம் 10

10. ஓட்டம் என்றதுமே நினைவுக்கு வரும் பெயர், உசேன் போல்ட். ஓட்டப்பந்தயத்தில் பல்வேறு உலகச் சாதனைக்குச் சொந்தக்காரரான இவர், சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடியவர்.