1) பெனிசிலின் (Penicillin) 1942

பாக்டீரியாவில் ஏற்படும் தொற்றுப் பிரச்னைகளைத் தடுக்கவும், உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட முதல் ஆன்டிபயாடிக் மருந்து. கண்டுபிடித்தவர்: அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Alexander Fleming). இந்த மருந்து கண்டறியப்படாமல் இருந்திருந்தால் இன்றைய காலகட்டத்தில் 80 மில்லியன் பேர் நோய் எதிர்ப்புசக்தி குறைவால் இறந்திருப்பார்கள்.

2) இன்சுலின் (Insulin) 1922

சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்னைகளை, எளிமையாகச் சரிசெய்யும் மருந்து. ஊசி மூலம் செலுத்தப்படும். இன்றைய ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபிகளின் முன்னோடி இன்சுலின்தான். இதைக் கண்டுபிடித்தவர், சார்லஸ் பெஸ்ட் (Charles H.Best).

3) பெரியம்மை தடுப்பூசி (SmallpoxVaccine)-796

தடுப்பூசி வகையைச் சேர்ந்த இதைக் கண்டுபிடித்தவர், எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner). பெரியம்மைக்கு மருந்து கண்டறியப்படும் முன்பு, 18ஆம் நூற்றாண்டு வரை உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

4) மார்ஃபின் (morphine) 1827:

தீவிர சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் வலி நிவாரணி மாத்திரை. இந்த மருந்து கண்டறியப்படுவதற்கு முன்பு, காயம் ஆறும் நாள் வரை வலியுடனேயே இருக்கவேண்டியிருந்தது. இதைக் கண்டுபிடித்தவர், ஃப்ரெட்ரிச் வில்ஹெல்ம் (Friedrich Wilhelm).

5) ஆஸ்பிரின் (Aspirin) 1899

உடல் வலி, மூட்டு வலி, தலைவலி, தசைப்பிடிப்பு போன்ற உடலில் ஏற்படும் சிறு சிறு வலிகளைப் போக்கக்கூடியது ஆஸ்பிரின். இதைக் கண்டுபிடித்தவர், ஃபெலிக்ஸ் ஹாஃப்மேன் (Felix Hoffmann) நூறாண்டுகள் கடந்தும் இதுபோன்று பவர்ஃபுல் வலி நிவாரணி மாத்திரை வேறு கண்டறியப்படவில்லை.

6) போலியோ தடுப்பூசி (Polio Vaccine) 1955

இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கக்கூடிய இது, தடுப்பூசி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலும் குழந்தைகளுக்கே இளம்பிள்ளை வாதம் (போலியோ) பாதிக்க வாய்ப்பு அதிகம் என்பதால், உலகம் முழுவதும் 5 வயது வரையான குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி படிந்துரைக்கப்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர், ஜோனஸ் சால்க் (Jonas Salk)

7) ஈத்தர் - (Ether) 1846

அறுவை சிகிச்சையின்போது, உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்யும் மயக்க மருந்து. இதைக் கண்டுபிடித்தவர், வில்லியம் தாமஸ் க்ரீன் மோர்டன் (William Thomas Green Morton) இது கண்டறியப்படுவதற்கு முன்பு வரை, அறுவை சிகிச்சையின்போது நோயாளிகள் வலியை எதிர்கொண்டபடி இருந்தனர்.

8) லிபிட்டார் (Lipitor) - 1985

கொலஸ்ட்ரால் அளவு சீரற்று இருப்பவர்களுக்கு, ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்யும் மருந்து. கொலஸ்ட்ரால் அதிகமானால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம். அவை அனைத்தையும் இந்த மருந்து முன்கூட்டியே சரிசெய்துவிடும் என்பதால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கியாரன்டி. இதைக் கண்டுபிடித்தவர், ஃபிசெர் (Pfizer)

9) குளோர்ப்ரோமேசின் / தோராசின் (Chlorpromazine or thorazine) - 1950

மனநலக் கோளாறுகளை சரிசெய்ய அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மருந்து. `குளோர்ப்ரோமேசின்’ கண்டறியப்பட்ட 10 ஆண்டுகளில், 50 மில்லியன் மக்கள் இதை உபயோகப்படுத்தியிருந்தனர்.

10) தட்டம்மை - Measles (1963)

1954ஆம் ஆண்டில், அமெரிக்க ஆய்வாளர்கள் என்டர்ஸ் மற்றும் தாமஸ் ஆகியோர் அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸை கண்டறிந்தனர். தொடர் ஆய்வுக்குப் பிறகு, இதற்கான மருந்தை 1963 -ம் ஆண்டு கண்டறிந்தனர். இது கண்டறியப்படுவதற்கு முன்பு வரை, அமெரிக்காவில் வருடத்துக்கு 4 மில்லியன் மக்கள் அம்மையால் பாதிக்கப்பட்டனர்.

ஆதாரம்: WebMD, MayoClinic