பொது அறிவு
Published:Updated:

உலகம் 10

குதிரை
பிரீமியம் ஸ்டோரி
News
குதிரை

உலக நாடுகள் பற்றிய 10 மினி ரவுண்ட்-அப்....

1. ஆப்பிரிக்கா கண்டம்தான் உலகிலேயே அதிக நாடுகள்கொண்ட கண்டம். மொத்தம் 54 நாடுகள் இந்தக் கண்டத்தில் உள்ளன.

உலகம் 10

2. அமெரிக்காவில் அதிகம் பேர் பின்பற்றுவது கிறித்துவ மதம். இதற்கு அடுத்து எந்த மதத்தை மக்கள் அதிகம் பின்பற்றுகிறார்கள் தெரியுமா? யூத மதம்.

3. உலகின் 90 சதவீதம் சுத்தமான தண்ணீர், அன்டார்டிகா கண்டத்தில்தான் உள்ளது.

உலகம் 10

4. ஸ்காட்லாந்து நாட்டின் தேசிய விலங்கு, யூனிகார்ன். ஒற்றைக் கொம்புடன் குதிரை மாதிரி இருக்கும் இது, ஒரு கற்பனை விலங்கு.

உலகம் 10

5. சீனப் பெருஞ்சுவரை சுற்றிப் பார்ப்பதற்காக, ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் சீனாவுக்கு வருகை புரிகிறார்கள்.

6. உலகில் அதிகம் இரட்டை குழந்தைகள் பிறக்கும் நாடு நைஜீரியா என்கிறது ஓர் ஆய்வு.

உலகம் 10

7. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் 200 மொழிகள் பேசப்படுகின்றன.

உலகம் 10

8. காலனி ஆதிக்கக் காலத்தின்போது, ஐரோப்பாவின் ஆதிக்கத்தில் இல்லாதிருந்த இரண்டு ஆப்பிரிக்க நாடுகள், எத்தியோப்பியா மற்றும் லைபீரியா.

உலகம் 10

9. பாப்புவா நியூனிகியா என்பது ஒரு சிறிய நாடு. ஆனால், உலகிலேயே மொழி வேறுபாடுகள் அதிகம் நிறைந்த நாடு இது. 851 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

10. உலகின் மிகப்பெரிய தீவு நாடு எது தெரியுமா? கிரீன்லாந்து. இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்.