பொது அறிவு
Published:Updated:

ஊட்டம் 10

ஆரோக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆரோக்கியம்

ஆரோக்கியம், ஊட்டச்சத்துன்னு சொன்னாலே காய்கறிகள்தானா எனக் கேட்கும் உங்களுக்காக... கலவையாக, கலக்கலாக 10 டிப்ஸ் தருகிறார், உணவியல் நிபுணர் அபிராமி.

1. ஓடியாடி விளையாடும்போது உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் வேகமாக இயங்கி, சிறிய அளவிலான அழுத்தம் ஏற்படும். இதை சரிசெய்ய, டார்க் சாக்லேட் (Dark chocolate) சாப்பிடுங்க. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள், மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

ஊட்டம் 10

2. அசைவ உணவுகளில் மீன் முக்கியமானது. வாரம் ஒருமுறையாவது மீன் சாப்பிடுங்க. இதில் இருக்கும் ஒமேகா 3, மூளை வளர்ச்சிக்கு உதவும். ஆனால், மெறுமொறுன்னு ருசியா இருக்குன்னு எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிடக்கூடாது. குழம்பாகச் செய்து சாப்பிடுவதுதான் நல்லது.

ஊட்டம் 10

3. பிரெட் சாப்பிடப் பிடிக்குமா? உங்க இஷ்டப்படியே சாப்பிடுங்க. ஆனால், ஜாமுக்குப் பதில், பீனட் பட்டரைத் தடவிச் சாப்பிடுங்க. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, உடலிலுள்ள நரம்புத் தொகுதியை ( Nervous system) பாதுகாக்கும்.

4. தயிருக்குப் பதில், வாரத்தில் ஒரு நாள் `கிரீக் யோகர்ட்’ (Greek Yogurt) சாப்பிடலாம். தயிரைவிட இதில் புரோட்டீன் அதிகம் இருக்கு. உடலில் ஆற்றலை அதிகரிக்கும். எளிதில் ஜீரணமாகும்.

ஊட்டம் 10

5. காய்கறிகளில் சுட்டிகளின் உடம்புக்கு ஏற்ற சூப்பர்ஹீரோ, பீன்ஸ். இதில், நார்ச்சத்து மற்றும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் சத்துகள் அதிகம். மலச்சிக்கலைத் தீர்க்கும். அதனால், பீன்ஸை விதவிதமாகச் சமைக்கச் சொல்லி சுவையுங்க.

6. காய்கறிகளைச் சமைச்சு சாப்பிடத்தானே சலிப்பே இருக்கு. கேரட், தக்காளி, குடைமிளகாய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சாலட் செஞ்சு சாப்பிடலாம். வைட்டமின், மினரல் சத்துகள் அதிகம் இருக்கு. மூளை செல்களை உறுதியாக்கும்.

ஊட்டம் 10

7. நல்ல பசும்பால், சத்துகள் நிறைஞ்சது. நீங்க வெஜிடேரியனாக இருந்தால், ஒரு நாளைக்கு நான்கு முறை குடிக்கலாம். நான்வெஜிடேரியனாக இருந்தால், இரு முறை அருந்தலாம். புரோட்டீன் அதிகம் இருப்பதால், உடல் வளர்ச்சிக்குத் துணைபுரியும்.

8. மட்டனில் இரும்புச்சத்து அதிகம் இருக்கு. மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறவங்க, மாதத்துக்கு ஒருமுறை மட்டன் சாப்பிடுங்க. உடலில் ஆக்ஸிஜனை அதிகரித்து, மூச்சுவிடும் பிரச்னையைக் குறைக்கும்.

9. நூடூல்ஸ்ன்னா ரொம்ப ஆசையா இருக்கா? அப்படின்னா, கோதுமை நூடுல்ஸ் சாப்பிடுங்க. அதனுடன் வல்லாரைக் கீரையை சாஸாகச் செய்து சாப்பிட்டால், டேஸ்டுக்கு டேஸ்ட்... பார்வைத்திறனுக்கும் நல்லது. ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

10. உடல் சோர்ந்தும் எந்த விஷயத்திலும் ஈடுபாடின்றி இருக்கும். காரணம், மன ஆரோக்கியம் பாதிப்பு. இதுக்கு, ஆப்பிளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சாப்பிடுங்க. இதில் இருக்கும் க்யூயர்சிடின் (Quercetin) கலவை, உடலினுள் நல்ல பாக்டீரியாவை அதிகப்படுத்தும்.