பொது அறிவு
Published:Updated:

ஏடு 10

புத்தகம்
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தகம்

பனையோலையில் தொடங்கி புத்தகங்கள் வரை ஏடு பற்றிய 10 துளிகள்...

1. குகைகளிலும் பாறைகளிலும் வரைந்த மனிதன், முதன்முதலில் பனையோலைகளை ஏடாகப் பயன்படுத்தினான். இதுவே ஓலைச்சுவடி. இந்தியா, நேபாளம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக இருந்தது.

ஏடு 10

2. களிமண், செப்புத்தடுகள், இரும்புத் தகடுகள், மரப்பலகைகள் போன்றவற்றிலும் எழுதினர். மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டறிந்தவர்கள் சீனர்கள். இரண்டாம் நூற்றாண்டில், ஹான் (Han) அரசர்கள் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம், கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை ரகசியமாகவே இருந்தது. பின்னரே பிற நாடுகளுக்குப் பரவியது.

3. காகிதத் தொழிற்சாலைகள் உருவாகாத காலத்தில், ஒருமுறை பயன்படுத்திய காகிதத்தை, மறுசுழற்சி செய்தே பயன்படுத்தி வந்தனர். 1744ஆம் ஆண்டு, ஜெர்மன் நீதிபதி கிளாப்ரோத், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருக்கும் அச்சிட்ட மைகளை அகற்றும் செயல்முறை கண்டறிந்தார்.

ஏடு 10

4. ஐரோப்பாவில்தான் முதன்முதலில் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் தொடங்கப்பட்டன. மேற்கு நாடுகளுக்கு பாக்தாத் வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால், ‘பாக்தாடிகாசு’ என்று அழைத்தனர்.

5. 1844ஆம் ஆண்டில், கனடாவைச் சேர்ந்த சார்லஸ் ஃபெனெர்டி (Charles Fenerty) மற்றும் ஜெர்மனியின் கெல்லர் (F.G.Keller) ஆகியோர், தனித்தனியாக மரத்தாலான இழைகளில் காகிதக் கூழாக்கும் செயல்முறைகளை உருவாக்கினர். காகிதம் அதிகமாகத் தயாரிக்கப்பட்டு பரவலானது.

6. பேப்பர் (Paper) என்பது லத்தீன் சொல்லான பாப்பிரசிலிருந்து வந்தது. இது, கிரேக்கத்தின் ‘சைப்பரசு பாப்பிரசு’ என்ற தாவரத்தின் பெயர். மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் காகிதம் அறிமுகமாவதற்கு முன்னரே பண்டைய எகிப்து நாட்டில் காகிதத்தைப் பயன்படுத்தினர்.

ஏடு 10

7. இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் காகித அளவினை 1768ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மானிய அறிவியலாளரான ஜோர்ஜ் லிச்டென்பர்க் (Georg Lichtenberg). டாக்டர் வால்ட்டர் போர்ஸ்ட்மான் (Walter Porstmann) என்பவர் அதை நெறிப்படுத்த, 1922ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதுவே, A வரிசை முறை. A1, A2, A3, A4 எனப்படும் இதில் A0 என்பதே பெரிய (முழு) அளவு.

ஏடு 10

8. அரேபியர்கள் மூலமாக, கி.பி.400ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் காகிதம் அறிமுகமானது. இந்தியக் காகித வகையே உயர் காகிதமாக உள்ளன. காரணம், இந்தியக் காகிதத்தின் 25 சதவீதம் பருத்தி இழைகளால் ஆனது. மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் இருக்கும் வகையிலும் இருப்பதால், அகராதிகள் தயாரிக்கப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

ஏடு 10

9. நூல் அல்லது புத்தகம் (Book) என்பது, ஜெர்மனிய சொல்லிலிருந்து வந்ததே. 19ஆம் நூற்றாண்டில் அச்சகங்கள் மூலமாக அதிக புத்தகங்கள் வெளியாகின. பதிப்பகங்களின் உரிமைகளுக்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. 20ஆம் நூற்றாண்டின் மத்தியில், உலகம் முழுக்க வருடத்துக்கு 2,00000 தலைப்புகளில் புத்தகங்கள் வெளியாகின.

10. காகிதப் பயன்பாட்டைக் குறைக்க உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இ-பேப்பர், இ-புத்தகம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாமும் தேவையற்ற விஷயங்களில் காகிதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்!