Published:Updated:

'குடை' வள்ளல்... தேவையறிந்து மாணவர்களுக்கு உதவிய அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்!

பள்ளிக்கு நடந்துவரும் மாணவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். தற்போதைய மழை அவர்களுக்கு அதிக சிரமத்தைக் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படி நடந்துவந்த மாணவர்களுக்குக் குடை கொடுத்து உதவியிருக்கிறார், முன்னாள் மாணவர் ஒருவர்.

Students with umbrella
Students with umbrella

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள அம்மைய நாயக்கனூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. பல அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கும் சூழலில், இங்கு 100 சதவிகித சேர்க்கை நடைபெற்றுள்ளது. இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆர்தர் ஆகியோர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள். அடிப்படை வசதிகள் முதல் தேவையான வசதிகள் இங்கு சிறப்பாக உள்ளன. இதனால் தனியார் பள்ளிக்கு இணையாக இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

Students with umbrella
Students with umbrella

அம்மையநாயக்கனூர், கொடைரோடு மற்றும் சிறுமலை அடிவாரம் பகுதியிலிருந்து மாணவர்கள் இங்கு நடந்துவந்து படிக்கிறார்கள். தற்போது மழை பெய்துவருகிறது. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு நடந்துவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், தற்போது தொழிலதிபருமான விஜயகுமார், பள்ளிக்கு நடந்து வரும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குடை வாங்கிக் கொடுத்து அசத்தியிருக்கிறார். வண்ணக் குடைகளை வாங்கிக் கொண்ட மாணவர்கள், மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வருகிறார்கள். தேவை அறிந்து உதவிய விஜயகுமாரின் சேவைக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.