பொது அறிவு
Published:Updated:

எழுத்து 10

எழுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்து

மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய ஆயுதம், மொழியும் அதன் வழியே எழுத்தும். இதோ, எழுத்து பற்றிய 10 விஷயங்கள்...

1. பொதுவாக, எழுத்து முறைகள் 4 வகைப்படும். அவை, பட எழுத்து (Logogram) , அசையெழுத்து (Syllabary), அகரவரிசை (Alphabetical order) மற்றும் Featural. பட எழுத்து முறைகளே உலகின் முதல் எழுத்து முறை. ஆதிமனிதன், உருவங்கள் மூலம் வெளிப்படுத்தியவை.

எழுத்து 10

2. உலகின் தொன்மை மொழிகளில் ஒன்று, தமிழ். இந்தியாவில் கிடைத்துள்ள சுமார் 1 லட்சம் கல்வெட்டுகளில், ஏறத்தாழ 60,000 கல்வெட்டுகளில் தமிழ் உள்ளன. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக கூகுள் கணக்கெடுப்பு சொல்கிறது.

3. தற்போது வழக்கில் இல்லாவிட்டாலும், இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காஷ்மீரி, நேபாளி, பஞ்சாபி போன்ற பல மொழிகளுக்கு அடிப்படையாக அமைந்தவை, சம்ஸ்கிருதம். 4 வேதங்கள் உட்பட பல இந்து சமய நூல்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டவையே.

எழுத்து 10

4. உலகில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளில் ஏழாவது இடத்தில் இருப்பது வங்காள மொழி. இது, ‘அபுகிடா’ என்ற எழுத்து வகையைச் சேர்ந்தது. இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கத்தில் எழுதப்படும். நமது தேசிய கீதம், வங்க மொழியில் எழுதப்பட்டதே.

எழுத்து 10

5. அபுகிடா எழுத்து முறையில் மெய்யெழுத்து, உயிரெழுத்தைத் தன்னுள் கொண்டே வரும். உயிர் மற்றும் மெய் எழுத்துகள் இணையும்போது, குறிகள் இடப்படும். நகரி, தேவநாகரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் போன்ற பலவும் அபுகிடா எழுத்து முறையிலே வருவன.

6. சீன மொழியில் எழுத, 3000 முதல் 4000 எழுத்துகளை அறிந்திருக்க வேண்டும். சீனர்களில் கஞ்சி (kanji) எனும் வகையினர் ஜப்பானிய மொழியையும், ஹஞ்சா [hanja) என்பவர்கள் கொரிய மொழியையும், சு னோம் (chu Nom) என்பவர்கள் வியட்நாமிய மொழியையும் புழக்கத்தில் கொண்டுள்ளனர். இவை, சி.ஜே.கே. (CJK) எழுத்துகள் எனப்படுகின்றன.

எழுத்து 10

7. கொரிய மொழி எழுத்துகள், ஹன்குவல் (Hangeul) எனப்படுகிறது. இந்த எழுத்துகள் 14ஆம் நூற்றாண்டில், செயோங் என்ற அரசரால் உருவாக்கப்பட்டது. பின்னர், வந்த சில அரசர்கள் இதைப் புறக்கணித்தாலும், 1945ஆம் ஆண்டு, ஜப்பானிடமிருந்து விடுதலை அடைந்ததும் கொரியாவின் அரசு மொழியானது.

8. ஜப்பானிய எழுத்துகள், ‘நிஹோங்கோ’ என்று அழைக்கப்படுகிறது. இது, ஜப்பானில் மட்டுமே பேசப்பட்டு வந்தாலும், ஜப்பானிலிருந்து இடம்பெயர்ந்து வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இம்மொழியைப் பேசுகின்றனர்.

எழுத்து 10

9. பிரெஞ்சு மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள், பிரெஞ்சைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியும், உலகின் முதன்மை மொழிகளில் ஒன்றாகவும் பிரெஞ்சு உள்ளது.

10. 13ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழி, உருது. இந்தியுடன் சேர்த்து ‘இந்துஸ்தானி’ என அழைக்கப்படுகிறது. தாய்மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் இருபதாவது பெரிய மொழி, உருது.