பொது அறிவு
Published:Updated:

ஐந்துகள் 10

நிலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலங்கள்

தமிழின் சிறப்பு எழுத்துகளில் ‘ஐ’யும் ஒன்று... இந்த ‘ஐ’யில் தொடங்கும் 10 விஷயங்களை அறிவோமா?

1. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பது ஐவகை தமிழர் நிலங்கள். இதை இன்னொரு பெயரிலும் சொல்வார்கள். அதுதான், ஐந்திணைகள். இதில், திணை என்பதற்கு ‘பிரிவு’ என்று பொருள்.

2. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று தமிழ் இலக்கணம், ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு, ஐந்திலக்கணம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில், எழுத்து மற்றும் சொல் இலக்கணங்கள், மொழிக்கு இலக்கணம் கூறுபவை.

ஐந்துகள் 10

3. வானம், நிலம், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை ஐம்பூதங்கள் என்பார்கள். நமது உடலில் தோல், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றையும் இந்த ஐவகை விஷயங்களுடன் ஒப்பிடுவார்கள்.

4. சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி ஆகியவற்றைத் தமிழின் ஐம்பெருங் காப்பியங்கள் என்பார்கள். இதில் குண்டலகேசி என்பது, ஒரு பெண் பெளத்த துறவியின் பெயர். அவரால் எழுதப்பட்டதால் இந்தப் பெயர்.

ஐந்துகள் 10

5. ஐந்தாண்டுத் திட்டம் என்பது, இந்திய திட்டக் குழு என்ற அமைப்பால், இந்திய நாட்டின் எல்லா வகை வளர்ச்சிக்காகவும், 1950 மார்ச் 15ஆம் நாளில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் இருப்பார். முதல் தலைவர், ஜவஹர்லால் நேரு. 2014ஆம் ஆண்டில் தற்போதைய பிரதமர், இந்தக் குழுவைக் கலைத்துவிட்டு, ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.

6. முஸ்லிம் மதத்தில், ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகை என்பது கடைப்பிடிக்கப்படுகிறது. இது, அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பு என்பதில் தொடங்கி, இரவு ஆரம்பமாகும்போது வரை நடைபெறும். ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு பெயர் உண்டு.

ஐந்துகள் 10

7. ஐந்து முக ருத்திராட்சம் என்பது, இந்துக்களில் சிவபெருமானை வணங்குபவர்கள் அணிவது. 1 முதல் 21 முகங்கள் வரை பல வகை ருத்திராட்ச கொட்டைகளை அணிவர். மத ரீதியாக மட்டுமன்றி, மனம் மற்றும் உடல் ரீதியான விஷயங்களிலும் உதவி செய்கிறது.

8. ஐங்கரன் என்பது, இந்துக் கடவுளான பிள்ளையாரைக் குறிப்பிடும் பெயர். நான்கு கரங்கள் மற்றும் தும்பிக்கையைச் சேர்த்து, ஐங்கரன் என்ற பெயர் உருவானது.

ஐந்துகள் 10

9. பண்டைய காலத்தில் தமிழக மன்னர்கள் படைகளை ஐந்து வகைகளாக வைத்திருந்தனர். பலதரப் படைகள், இருநிலைப் படை, நான்கு வகைப் படை, நான்கு வகுப்புப் படை, ஐந்து உறுப்புப் படை என்பவை அவற்றின் பெயர்கள். இதிலும், தரம் மற்றும் செயல்பாடு அடிப்படையில் பல உட்பிரிவுகள் இருந்தன.

10. காலாட் படை, குதிரைப் படை, கப்பல் படை, விமானப் படை என்பவை உலக அளவில் இருக்கும் பொதுவான படைகள். ஜப்பானில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது, தளபதி ஜெனரல் மோலா என்பவர் தனது ஒற்றர் படை பற்றிக் குறிப்பிட Fifth column என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதுவே, உலகம் முழுக்க ‘ஐந்தாம் படை’ என்று பரவியது.