பொது அறிவு
Published:Updated:

இயற்கை 10

இயற்கை
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை

உலகில் பல்லுயிர்களை உருவாக்கி, தொடர் சங்கிலியால் இயங்கவைப்பது நீர், நிலம், காடுகள் போன்றவையே. அந்த இயற்கை பற்றி 10 விஷயங்கள்...

1. அமேசான் மழைக்காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் கொண்டவை. 9 நாடுகளை உள்ளடக்கி, உலகளவில் 20 சதவிகிதத்துக்கும் மேலான ஆக்சிஜனை வெளியிடுவதால், ‘பூமியின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது.

இயற்கை 10

2. ‘இந்தியாவின் நுரையீரல்’ என அழைக்கப்படுவது, மேற்கு தொடர்ச்சி மலை. இதை, 2012ஆம் ஆண்டில், உலகப் பராம்பர்ய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இங்கு, 139 வகை பாலூட்டிகள், 7,402 பூக்கும் தாவரங்கள், 1,814 பூக்காத தாவரங்கள், 10 வகை காட்டுத் தேனீக்கள், 6,000 வகை பூச்சிகள், 508 பறவையினங்கள், 179 நீர் மற்றும் நில வாழ்வன உள்ளன.

3. இந்தியாவில் காடுகள் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாக்கும் பல்வேறு சட்டங்களில் சில... யானைகள் பாதுகாப்புச் சட்டம் (1873), இந்தியக் காடுகள் பாதுகாப்புச் சட்டம் (1927), வங்காள காண்டாமிருகம் பாதுகாப்புச் சட்டம் (1932), பம்பாய் வனவிலங்குகள் மற்றும் வனப் பறவைகள் பாதுகாப்புச் சட்டம் (1951), வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (1972), காடுகள் மற்றும் இயற்கைச் சூழல்கள் பாதுகாப்புச் சட்டம் (1994), பல்லுயிர்ப் பெருக்க சட்டம் (2002).

இயற்கை 10

4. இந்தியாவில் 372 வகை பாலூட்டிகள், 1330 பறவை இனங்கள், 399 ஊர்வன இனங்கள், 60,000 பூச்சி இனங்கள், 181 நீர் மற்றும் நிலவாழ்விகள், 1693 மீன் இனங்கள் வாழ்கின்றன.

5. பூமியில் உள்ள நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தை அட்லான்டிக் பெருங்கடல் ஆக்கிரமித்துள்ளது. மேற்கு கண்டம் எனப்படும் புதிய உலகத்தையும், கிழக்குக் கண்டம் என அழைக்கப்பட்ட பழைய உலகத்தையும் அட்லான்டிக் பெருங்கடல் இணைக்கிறது.

6. உலகின் மிகப்பெரிய நீர்த் தொகுதி, பசிபிக் பெருங்கடல். 18 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இது, உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டது. ஏறத்தாழ 2,500 தீவுகளை அடக்கியது. இது, மற்ற அனைத்துப் பெருங்கடல்கள் தீவுகளின் எண்ணிக்கையைவிட அதிகம்.

இயற்கை 10

7. ஆயிரத்துக்கு 0.5 பகுதி உப்பு (புளோரைடு) இருந்தால், அது நன்னீர் எனப்படும். இந்தியாவில் 19 மாநிலங்களில், நன்னீரில் புளோரைடு உப்புகளின் அளவு 10.5 விழுக்காடு உள்ளதால், குடிக்கத் தகுதியற்று உள்ளது.

இயற்கை 10

8. தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள உலகின் பெரிய பாலைவனங்களில் ஒன்று, அட்டகாமா பாலைவனம். சுமார் 1,000 கிலோமீட்டர் நீளம்கொண்ட இப்பாலைவனத்தை, உலகிலேயே மிகவும் வறண்ட பாலைவனம் என்று நாசா மற்றும் தேசியப் புவியியல் கழகம் அறிவித்துள்ளன.

இயற்கை 10

9. சீனத்தின் வடக்குப் பகுதியிலும், மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள பெரிய பாலைவனம், கோபி பாலைவனம். இதில் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல், கற்களுடன் காணப்படும். முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேதான் கண்டுபிடிக்கப்பட்டன. டைனோசர் முட்டைப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டதும் இங்குதான்.

இயற்கை 10

10. உலக பூமி தினம் 1970ஆம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின், விஸ்கான்சின் மாகாண கவர்னர், கேலார்ட் நெல்சன் (Gaylord Nelson) தொடங்கிய இந்த நிகழ்வில் 175 நாடுகள் பங்கேற்று, உலக பூமி நாளாகக் கடைப்பிடிக்கத் தொடங்கியது.