‘‘இவர்தான் ஜானி.’’

‘‘அங்கிள்... உங்களை நான் அறிமுகப்படுத்தறேன். இவர் ஒரு சிறந்த வென்ட்ரிகோலிஸ்ட்!’’

‘‘இல்லே ஜானி, வென்ட்ரிலோக்கிஸ்ட்!’’

‘‘வென்ட்ரிகோலிஸ்ட்!’’

‘‘லோக்கிஸ்ட்... லோக்கிஸ்ட்!’’

இப்படிச் சிரிப்பும் கைதட்டலுமாக அதிர்ந்தது பள்ளி வளாகம். கூடவே, ஒவ்வொரு சுட்டியின் கண்களிலும் ஆச்சர்யம். ‘‘பொம்மை எப்படிப் பேசுது?’’ என வியப்புடன் பார்த்துகொண்டிருந்தார்கள்.

பொம்மையைவைத்து நடத்தப்படும் வென்ரிட்லோக்கிஸம் (ventriloquism) கலையில், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர், சாந்தகுமார். சென்னையிலுள்ள திரிசூலம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்காக, சிறப்பு நிகழ்ச்சி நடத்தினார்.

‘‘தமிழில் இதை ‘மாயக்குரல் கலை’ என்பார்கள். Ventri என்றால், வயிற்றுப் பகுதி. வயிற்றிலிருந்து குரலைக் கொண்டுவந்து உதடு அசையாமல் பேசுவது. 1977ஆம் ஆண்டில், மியூசிக் அகாடமியில் எம்.எம்.ராய் என்பவரின் மாயக்குரல் நிகழ்ச்சியைப் பார்த்து வியந்தேன். அப்போது முதலே அதன்மீது ஆர்வம் அதிகமானது. கல்லூரி நாள்களிலிருந்தே எனக்கு நகைச்சுவை ஆர்வம் அதிகம். மிமிக்ரி, மைமிங் போன்றவற்றில் கலந்துகொள்வேன். 20 ஆண்டுகளுக்குப் பிறகு 1997ஆம் ஆண்டிலில் மீண்டும் ராயைச் சந்தித்தபோது, அவரிடம் கற்றுக்கொண்டேன். 22 ஆண்டுகளாக, 3300 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்’’ எனப் புன்னகைக்கிறார் சாந்தகுமார்.

இந்த நான்ஸ்டாப் சிரிப்பு வெடி நிகழ்ச்சி முடிந்ததும், மாணவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ஜானியைத் (பொம்மை) தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார்கள். பிறகு, அவரிடம் ஜானியை மிஞ்சும் கேள்விகளைக் கேட்டார்கள்.

‘‘எப்படி உதடு அசையாமல் பேசறீங்க?’’

‘‘எல்லாமே பயிற்சிதான். முடிந்தவரை உதடு பிரியாத எழுத்துகளில் ஆரம்பிக்கும் வார்த்தைகளாகப் பேச வேண்டும்.’’

‘‘உங்ககிட்ட எத்தனை பொம்மைகள் இருக்கு?’’

‘‘ஜானி என்ற பையன், ஜாக் என்ற குரங்கு, ராணி என்ற பெண் பொம்மை. அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த வெள்ளைப் பலகை, மைக் மற்றும் எலும்புக்கூடு பொம்மையையும் பயன்படுத்துவேன்.’’

‘‘வெளிநாடுகளுக்குப் போயிருக்கீங்களா?’’

‘‘துபாய், சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா எனப் பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்தியிருக்கேன்.’’

‘‘இதைக் கற்க இங்கே சென்டர் இருக்கா?’’

‘‘தனியாகப் பயிற்சி நிலையங்கள் பெரிதாக இல்லை. ஆர்வமாகக் கேட்டு கற்பதுதான். நானும் வீட்டில்வைத்து 15 பேருக்குச் சொல்லித்தந்துட்டிருக்கேன்.’’

‘‘நாங்களும் இப்படிப் பேச முடியுமா?’’

‘‘ஆர்வமும் நகைச்சுவை உணர்வும் இருந்தால், நீங்களும் செய்யலாம், மற்றவர்களைச் சந்தோஷப்படுத்தலாம்!’’ என்று குறுக்கிட்டுப் பேசி, கை கொடுத்தது ஜானி.

மீண்டும் அங்கே உற்சாக அலை எழுந்தது!