‘இது ஒரு மாநிலத்துக்கே கல்வி அளித்த மேதை பிறந்த இடம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது, சுட்டி விகடன் நடத்திய ‘விருதுநகர் 200’ என்ற ஊரைத் தெரிஞ்சுக்கிட்டோம் வெற்றி விழா.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் மாவட்டம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளை அறிந்துகொள்ளும் வகையில், ‘இன்ஃபோ 200’ என்ற இணைப்பிதழை அளித்து, பள்ளிகள் வழியே தேர்வு நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறது நம் சுட்டி விகடன். சேலம், தர்மபுரி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைத் தொடர்ந்து, விருதுநகர் பள்ளிகளிலும் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளிலேயே விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 54 அரசுப் பள்ளிகள் உட்பட 118 பள்ளிகளைச் சேர்ந்த 23,000 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியிருந்தனர். இதில் 1,320 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா, ஜூலை 20ஆம் தேதி, சிவகாசி AAA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ‘‘நகர்ப்புற மாணவர்களுக்கு எந்த வகையிலும் கிராமப்புற மாணவர்கள் குறைந்தவர்களில்லை. கிராமப்புற மாணவர்களுக்கு அனைத்து திறமைகளும் உள்ளன. ஆனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே கல்வி பெறும் விஷயத்தில் ஓர் இடைவெளி உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையேயுள்ள இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். கற்றலுக்கான எல்லா வசதிகளும், எல்லாச் சூழ்நிலையிலும் இரண்டு தரப்பு மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும். அனைவருக்கும் பாகுபாடின்றி கல்வி தரப்பட வேண்டும். வாய்ப்பு கிடைத்தால், கிராமப்புற மாணவர்கள் நிச்சயம் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள்’’ என்றார்.

மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், ‘‘நாங்கள் ஐ.பி.எஸ் தேர்வுக்காகப் படிக்கும்போது, உலகம் முழுவதுமுள்ள அனைத்து விஷயங்களையும் படித்தோம். அதேநேரத்தில், உள்ளூர் வரலாறு மிக முக்கியம் என்பதையும் உணர்ந்து, தெரிந்துகொண்டோம். தற்போது, சுட்டி விகடன் வழியே மாணவர்கள், தங்கள் சொந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொள்ள எடுத்திருக்கும் முயற்சி சிறப்பானது. அரசுத் தேர்வுகள் எழுதும்போது, உள்ளூர் குறித்த விவரங்களைத் தெரிந்துவைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாணவர்கள் தொடர்ந்து படித்து, அரசுப் பணிக்கு வர முயற்சி செய்யுங்கள். அரசுத் தேர்வுக்கான முன்னோட்டமாக OMR ஷீட் முறையில் இந்தத் தேர்வை நடத்தியிருப்பது சிறப்பானது’’ என்றார்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகமது அஸ்லம், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை குறித்துப் பேசினார். ‘‘மாணவிகள் வெளியே செல்லும்போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும். அடையாளம் தெரியாதவர்களிடம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாலையில் வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம், சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும்’’ என்றார்.

வட்டாட்சியர் மாரியப்பன், ``பெயரிலேயே விருதைத் தாங்கியிருக்கும் ஊர் நம் விருதுநகர். `படிக்காத மேதை’ என்று காமராஜரை அழைப்பதைவிட, `பல கோடி மாணவர்களைப் படிக்கவைத்த மேதை’ என்றழைக்க வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாகக் கல்வியில் முதலிடத்திலிருக்கும் மாவட்டம் நம் விருதுநகர். இந்தத் தேர்வானது, எதிர்காலத்தில் மாணவர்கள் சந்திக்க இருக்கும் போட்டித் தேர்வுகளுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கும். கல்விதான் நாம் முன்னேறுவதற்கான ஒரே வழி’’ என்றார்.

AAA கல்லூரி முதல்வர் சேகர், ‘‘தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களே தீர்மானியுங்கள்’’ என்றார்.

தியாகராஜர் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, மாணவர்களிடம் வார்த்தை விளையாட்டுகள் சொல்லியும், பாடல்கள் பாடவைத்தும் உற்சாகமூட்டினார்.

கல்லூரிச் செயலர் கார்வண்ணன், இணைச் செயலர் விக்னேஷ்குமார், ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பேராசிரியை தேவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

‘பசுமை இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த நாகராஜ், நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும், எழுதி முடித்த பிறகு, மண்ணில் நடும் விதை, பென்சில் வழங்கினார்.

பரிசுகளுடனும் சான்றிதழ்களுடனும் உற்சாகமாகப் புறப்பட்டனர் சுட்டிகள்!