பொது அறிவு
Published:Updated:

ஈர்ப்பு 10

மொபைல் கேம்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மொபைல் கேம்ஸ்

உலக அளவில் இன்று பலரையும் ஈர்த்திருப்பது மொபைல் கேம்ஸ். அதில், அதிகமானவர்களின் 10 அதிரடி கேம்ஸ்...

1. Batman-Arkham Asylum: பேட்மேனின் சாகசங்கள் நிறைந்த இந்த கேம், ஒரு முழு நீளத் திரைப்படம் போல, சுவாரஸ்யம் கூட்டுகிறது. பல்வேறு கதாபாத்திரங்கள், திகில் கூட்டும் சாகசங்கள் எனப் பெரும் வரவேற்பைப் பெற்று, அடுத்தடுத்த பாகங்களுக்கும் வழி அமைத்துள்ளது.

ஈர்ப்பு 10

2. Tomb Raider: லாரா கிராஃப்ட் என்ற பெண் தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் சாகசமே இது. அட்வெஞ்சர், புதிருக்கு விடை தேடுவது என ஒரு கலக்கல் விருந்தாக இருக்கும் இந்த கேம் தொடரில், இதுவரை 19 வெளியாகியுள்ளன. இதை மையப்படுத்தி, ஹாலிவுட் படங்களும் வெளியாகியுள்ளன.

3. Prince of Persia: இளவரசியை மீட்கச் செல்லும் மாவீரனின் சாகசம். தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு முன்பே 2 D-யில் ஹிட்டடித்தது. அதை மெருகேற்றி யுபிசாஃப்ட் என்ற நிறுவனம் 2003ஆம் ஆண்டில் அட்டகாசமான கேமாக வெளியிட்டது. மேலும் 2 பாகங்கள் வெளியாகின. முதல் பாகம் திரைப்படமாகவும் வெளியானது.

ஈர்ப்பு 10

4. Assassin’s Creed: வரலாற்று பாடம் என்றாலே ஓடுபவர்களையும் சுவாரஸ்யமாகச் சுண்டி இழுக்கும் கேம். வரலாற்றுடன் கற்பனை கலந்த அதிரடி சயின்ஸ் ஃபிக் ஷன். அந்தக் காலத்தின் கலாசாரம், கட்டடக் கலை என அனைத்தையும் கொடுத்துள்ளார்கள். கம்ப்யூட்டர், ப்ளே ஸ்டேஷன், மொபைல் என அனைத்திலும் ஹிட்.

5. World of Warcraft: தற்போது பிரபலமாக இருக்கும் ஆன்லைன் மல்டிபிளேயர் கேமிங் முறையை, உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது இதுதான். 2004ஆம் ஆண்டு பிளிசார்ட் என்டர்டெயின்மென்ட் (Blizzard Entertainment) நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு கணக்கின்படி 9.23 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.

6. Street Fighter: காம்பேட் வகை ஃபைட்டிங் கேம்களுக்கு ஆரம்பம் இதுதான். விதவிதமான சக்திகள்கொண்ட சுவாரஸ்ய கதாபாத்திரங்களுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டையிடுவது. இதன் வழிவந்த மார்டல் காம்பேட், டெக்கன், மார்வெல் vs கேப்காம் என அனைத்துமே சூப்பர்ஹிட்!

ஈர்ப்பு 10

7. Need For Speed: கேமிங் தயாரிப்பில் முன்னோடியான எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் ரேஸிங் கேம். 1994ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 23 வெளியாகியுள்ளது. 24ஆவது கேம், இந்த வருடம் வெளியாகும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனம், இதைத் திரைப்படமாக எடுத்து 200 மில்லியனை அள்ளியது.

8. Halo: ஃபர்ஸ்ட் பர்சன் ஷூட்டர் கேம்களில் முக்கியமானது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘ஹேலோ’. ஏலியன்களிடமிருந்து பூமியைக் காப்பாற்றும் கதை. 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பல பாகங்கள் வெளிவந்துள்ளன. இதன் புதிய வெர்ஷன் ‘ஹேலோ: இன்ஃபைனைட்’, அடுத்த வருடம் வெளியாகிறது.

ஈர்ப்பு 10

9. Pokemon Go: தற்போதைய PUBG போல சில வருடங்களுக்கு முன்பு, உலகையே கட்டிப்போட்டது Pokemon Go. ஆக்மென்டட் ரியாலிட்டி துணையுடன் ஆடப்படும் இது, பலரையும் ஸ்மார்ட்போனுடன் தெருத் தெருவாகச் சுற்றவைத்தது. இதை வெளியிட்ட நியான்டிக் நிறுவனம், இதே கான்செப்டில் ஹாரிபாட்டர் கேம் வெளியிடப்போகிறது.

10. PlayerUnknown’s Battlegrounds (PUBG): இன்று பலரின் ஃபேவரைட் இதுதான். 100 ப்ளேயர்கள் ஒரு தீவில் இறக்கிவிடப்பட, அங்கே கிடைக்கும் ஆயுதங்களை வைத்து தற்காத்துக்கொள்ள வேண்டும். PUBG கார்ப் நிறுவனம் 2017-ல் வெளியிட்ட இது, 10 கோடிக்கும் அதிகமான முறை டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.