Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

யோபிக் வரிசையில் அடுத்து டென்னிஸ் புயல் சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது. ரோனி ஸ்க்ரூவாலாவின் ஆர்.எஸ்.வி.பி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். மகளிர் ஒற்றையர் பிரிவில் 27 ரேங்க் வரையும் இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும் பிடித்து இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்தவர் சானியா. “என் கதை படமாகப்போகிறது என முடிவானதும் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடக்கத் தொடங்கிவிட்டன... உங்களைப்போலவே என்னைத் திரையில் காண நானே ஆர்வமாக இருக்கிறேன்’’ எனப் பேட்டிகொடுத்திருக்கிறார் சானியா.  நாங்களும்தான்!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரபுதேவா - தமன்னா நடிப்பில் திகில் கிளப்பிய படம் தேவி. ஏ.எல். விஜய் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தேவி-2’ வின் ட்யூன் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.   ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான சம்பவங்களைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளார்  பிரபுதேவா. அதில் தமன்னாவின் க்யூட் ரியாக்ஷன்களை கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். தம்மு ஆர்மி!

இன்பாக்ஸ்

ஷ்யாவில் இருக்கிற நோவயா ஜெம்லியா தீவுக்கூட்டங்கள் துருவக் கரடிகளுக்குப் பெயர் பெற்றவை. சென்ற வாரம் இந்தக் கரடிகள், கூட்டம் கூட்டமாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைய, மக்களெல்லாம் அச்சத்தில் நிலைகுலைந்துபோயினர். எல்லோரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு பல நாள்கள் இருக்கவேண்டியதானது. இந்த வெள்ளைக்கரடிகள் ஜன்னல்வழியாக வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை எடுத்துத் தின்பதும், வீட்டை உடைப்பதும் என அட்டகாசம் செய்ததோடு சில கரடிகள் மனிதர்களையும் தாக்கியுள்ளன. அழிந்துவரும் உயிரினமாகக் கருதப்படும் இந்த துருவக் கரடிகள் உணவுப் பற்றாக்குறையாலும், பருவநிலை மாற்றத்தாலும்தான் இப்படி இடப்பெயர்ச்சி அடைகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களுக்கு மட்டுமா பூமி!

யானை சர்ச்சை இந்தியா முழுக்கத் தொடர்கதைதான். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா 2015 தொடங்கி 2018வரை யானை-மனிதர்கள் மோதல்களால் 378 யானைகளும், 1713 மனிதர்களும் பலியாகியுள்ளனர் என்ற அதிரவைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இதில் 226 யானைகள் மின்வேலிகளில் சிக்கியும், 59 யானைகள் வேட்டையாடப்பட்டும், 26 விஷம் வைக்கப்பட்டும் இறந்துபோனதாகச் சொல்லப்படுகிறது. இதுபோக ரயில்மோதி இறந்துபோன யானைகள் எண்ணிக்கை 62 என்றபோதும், அதில் வெறும் 13 மட்டுமே வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கானுயிர்களைக் காப்பாற்றுங்கள்!

மேற்குவங்கத்தில் 2013 தொடங்கி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் லவுடு ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த மாதங்களில் பள்ளி, கல்லூரித் தேர்வுக்காலம் என்பதால் மாணவர்கள் படிப்பு கெட்டுப்போகும் என்பதற்காக இந்தத் தடையை அமல்படுத்தியது அம்மாநில அரசு. இது தேர்தல் நேரம், ஸ்பீக்கர் இல்லாமல் பிரசாரம் செய்ய முடியாது என்று தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பா.ஜ.க. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் “உங்கள் தேர்தல்களைவிட பிள்ளைகளின் படிப்புதான் முக்கியம்’’ என பா.ஜ.க-வின் நடுமண்டையிலேயே குட்டு வைத்திருக்கிறது. தேவையா இது?

ந்தியாவிலேயே முதல்முறையாக பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் பொதுக்கழிப்பிடங்களை ஹைதராபாத்தில் அமைத்திருக்கிறார்கள். ‘இந்தியா முழுக்க பொதுக்கழிப்பிடங்களைப் பெரும்பாலும் ஆண்கள்தான் பயன்படுத்துகிறார்கள், அவையெல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுவதும் இல்லை. அதனால் பெண்கள் இந்தக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்கள். அதை மாற்றும் வகையில் பெண்களுக்கு மட்டுமான கழிப்பிடங்களை உருவாக்கியிருக்கிறோம்’ என்கிறார்கள் ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகத்தினர். இந்தக் கழிப்பிடங்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நிர்வகித்து, கழிப்பிடங்களோடு பெண்களுக்கான பொருள்கள் விற்கும் கடைகளையும் கூடவே அமைத்திருக்கிறார்கள். அவசியம்... அவசரம்!

இன்பாக்ஸ்

ந்தியாவின் மோஸ்ட் வான்டட் லைப் ஸ்டைல் கோச் `லூக் கூட்டினோ’ (Luke Coutinho). எடை குறைப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாதிரியான விஷயங்களில் பல பிரபலங்களுக்கும் இவர்தான் பயிற்சியாளர். இவருடைய சமீபத்திய மாணவர் அனுஷ்கா. ‘பாகமதி’ படத்துக்குப் பிறகு எடையைக் குறைத்து உடலை ஸ்லிம்மாக்கும் முயற்சியில் இருந்தார் அனுஷ்கா. ஆனால் என்ன செய்தும் குறையவில்லை. அவரை இப்போது ஃபிட்டாக மாற்றிக் காட்டியிருக்கிறார் லூக் கூட்டினோ. அனுஷ்காவின் நியூலுக்கில் சொக்கிப்போயிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். ஸ்லிம்மாயி! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism