Published:Updated:

சிம்புவை மிகவும் பிடிக்கும்: விஷால் சர்ப்ரைஸ்!

Vikatan Correspondent
சிம்புவை  மிகவும் பிடிக்கும்: விஷால் சர்ப்ரைஸ்!
சிம்புவை மிகவும் பிடிக்கும்: விஷால் சர்ப்ரைஸ்!
சிம்புவை  மிகவும் பிடிக்கும்: விஷால் சர்ப்ரைஸ்!

சென்னை: ஒரு நடிகராக சிம்புவை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலின்போது இருவரும்  எதிரெதிர் அணியில் இருந்தனர். அதனால் இருவருக்கும்  சிக்கல் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில்,  நடிகர் விஷால் இப்படி கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அண்மையில்,சென்னையில்  தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி  நடைபெற்றது. அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடிகர்கள் விளையாடினர். இந்த போட்டிகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து  நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்கள்.

அப்போது நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால் கூறுகையில், "எங்களைப்பற்றிய விமர்சனங்களை மீறி நட்சத்திர கிரிக்கெட் வெற்றி பெற்றது. நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ளாததால் அவர் மீது கோபம் இல்லை. கலந்துகொள்ளாத யார் மீதும் கோபம் இல்லை. நடிகர் சங்கத்தில் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். அஜித்தின் கருத்தை மதிக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட உரிமை. எனக்கும் அஜித்துக்கும் எவ்விதப் பிரச்னையும் கிடையாது. சக நடிகர்களிடம் பிரச்னை செய்வதற்காக நடிகர் சங்கத்துக்கு வரவில்லை.

அஜித்தின் பாடலை நான் நிறுத்தினேன் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை. நடிகர் சங்கத்திலிருந்து விலகுவது குறித்து சிம்பு அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். நடிகர் சங்கம் என்பது ஆந்திரா கிளப்போ, லீ கிளப்போ கிடையாது. சேவை பிடிக்கவில்லை என்று விலக முடியாது. சிம்புவின் கருத்தை மதிக்கிறேன். ஒரு நடிகராக சிம்புவை எனக்கு மிகவும் பிடிக்கும்"  என்று கூறினார்.