Published:Updated:

திருட்டு வழக்கு: ``என்னைப் பற்றி அவதூறு பேசினால் வழக்கு தொடர்வேன்" - பார்வதி காட்டம்

பார்வதி

பார்ட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டேன். அதை பார்வதி நாயரும் கவனித்துவிட்டார். பின்னர், நான் பார்த்ததை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். அதன்பின் திருட்டுப் பழியை என் மீது சுமத்தி புகார் கொடுத்துவிட்டார் - சுபாஷ் சந்திர போஸ்

திருட்டு வழக்கு: ``என்னைப் பற்றி அவதூறு பேசினால் வழக்கு தொடர்வேன்" - பார்வதி காட்டம்

பார்ட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டேன். அதை பார்வதி நாயரும் கவனித்துவிட்டார். பின்னர், நான் பார்த்ததை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். அதன்பின் திருட்டுப் பழியை என் மீது சுமத்தி புகார் கொடுத்துவிட்டார் - சுபாஷ் சந்திர போஸ்

Published:Updated:
பார்வதி

நடிகை பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் பணிபுரியும் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் தனது வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடியதாகப் புகார் செய்திருந்தார். ஆனால், இதை மறுத்துள்ள அந்த நபர், பார்வதி நாயர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், தன்னைப் பற்றி எந்தப் புகாரும் அளிக்கக்கூடாது என்று மிரட்டியதாகவும் பார்வதி நாயர் அளித்தப் புகாரை எதிர்த்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பார்வதி நாயர்
பார்வதி நாயர்

மேலும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த சுபாஷ், "பார்வதி நாயரின் வீட்டில் இரவுகளில் பார்ட்டிகள் நடைபெறும். இதில் பார்வதி நாயரின் ஆண் நண்பர்களும் பங்குபெறுவார்கள். இந்நிலையில் அங்கு நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்த்துவிட்டேன். அதை பார்வதி நாயரும் கவனித்துவிட்டார். பின்னர், நான் பார்த்ததை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். அதன்பின் திருட்டுப் பழியை என் மீது சுமத்தி புகார் கொடுத்துவிட்டார்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்துப் பார்வதி நாயரும், தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்துள்ளதால் காவல் துறையினர் இந்தப் புகார்களை விசாரித்து வருகின்றனர்.

பார்வதி நாயரின் வெளியிட்டுள்ள அறிக்கை.
பார்வதி நாயரின் வெளியிட்டுள்ள அறிக்கை.

இது பற்றி விரிவாகப் பதிவிட்டுள்ள பார்வதி நாயர், "கடந்த வாரத்திலிருந்து என்னைப் பற்றியான போலியான தகவல்களும், தவறான குற்றச் சாட்டுகளும் பரவிய வண்ணம் இருக்கின்றன. அதற்கெல்லாம் தெளிவான விளக்கமளிப்பதற்காக இந்தப் பதிவைப் பதிவிடுகிறேன். என்னுடையப் பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இன்னும் சிலர் மீது 20.10.2022 அன்று சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார்(FIR) ஒன்றைக் கொடுத்திருந்தேன். நான் சட்டத்தை சரியாகப் பின்பற்றியுள்ளேன். இதில் நான் சட்ட வரம்புகளை மீறவில்லை. அப்படி இருக்கையில், திரு. சுபாஷ் சந்திரபோஸை நான் தாக்கி துஷ்பிரயோகம் செய்தேன் என்று குற்றம் சாட்டுவது நியாயமற்றது. அவர் பகுதி நேர உதவியாளராகவும், செல்லப் பிராணிகளைப் பராமரிப்பவராகவும் என் வீட்டில் பணிபுரிந்தவர். வார இறுதி நாட்களில் என்னிடம் வேலை செய்தார். இந்த திருட்டுச் சம்பவத்தில் அவரைச் சந்தேகிக்க சரியான காரணம் இருந்தது. காவல்துறையில் புகார் அளிக்கும் முன் எனது சந்தேகேத்தை உறுதி செய்து கொள்ளவதற்கு அவரிடம் விசாரித்தேன். அவர் பதில் சொல்லாமல் மழுப்பியதால், எனது உடைமைகளை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியதாயிற்று.

 பார்வதி
பார்வதி

ஆனால், வெறுக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவரது பேட்டியும் அவரது அறிக்கையும் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து, கவனத்தை திசை திருப்பவும், என்னைக் களங்கப்படுத்தற்காக மட்டுமே நேர்காணலையும், ஊடகத் தந்திரங்களையும் செய்து வருகிறார்.

மேலும், திரு. செல்டன் ஜார்ஜ் அவர்களின் நேர்காணல் மற்றும் வெளியீடுகளைப் பொறுத்தவரை, அவர் ஒரு ஒப்பனைக் கலைஞராக இருந்தவர். அவர் கூறும் குற்றச்சாட்டுகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அவர் என்னைத் தவறாக சித்தரித்து, என் புகழுக்குக் களங்கம் விளைவித்து, அவர் புகழடையப் பார்க்கிறார். அவர் கூறியது போல் படப்பிடிப்பு 05.09.2022 அன்று நடந்ததுள்ளது என்றால் படப்பிடிப்பு நடந்த நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவர் ஏன் முன்வைக்கவில்லை. அதற்கு அவரிடம் சரியான காரணமும் இல்லை. அவரது நேர்காணலில் அவர் கையடக்க மொபைல் சாதனத்தில் கைப்பற்றப்பட்ட அங்கீகரிக்கப்படாத வீடியோவை வெளியிட்டார். இது எனது தனியுரிமைக்கு எதிரானது. வீடியோவை எடுக்கவோ அல்லது அத்தகைய வீடியோவை வெளியிடவோ அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

பார்வதி
பார்வதி

சட்ட ஆலோசனையின் பேரில் எனது நலன்களை சட்டரீதியாக பாதுகாக்க பின்வரும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். 1. நான் திரு. சுபாஷ் சந்திர போஸ் மற்றும் திரு. செல்டன் ஜார்ஜ் ஆகியோருக்கு எதிராக, சென்னை எழும்பூர், பெருநகர மாஜிஸ்திரேட் கோப்பில் தனிப் புகார் அளித்துள்ளேன்; 2. தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்; iii இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிட தடை விதிக்கக் கோரியும், தடை உத்தரவு கோரியும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுமட்டுமின்றி, தற்போதுள்ளத் தவறான வெளியீடுகளை அகற்ற வேண்டும்.

நான் சட்டத்தை பின்பற்றுகிறேன், நீதி வழங்குவதற்கான சட்ட அமைப்பை நம்புகிறேன். வெளியீடு மற்றும் செய்திகளில் என்னை தவறாகச் சித்தரிப்பது எனக்குக் கடுமையான மன அழுத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எனது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுத்தத் துறையில் எனக்கானப் பெயரை உருவாக்க நான் கடுமையாக உழைத்துள்ளேன். இந்தப் பிரச்சினையில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதாலும், என்னைப் பற்றிய தவறான தகவல்கள் கொண்ட பிரசுரங்கள் முற்றிலும் பொய்யானவை என்பதாலும் எனது நிலைப்பாட்டை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்.

நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த எனது உடைமைகள் திருடப்பட்டதால் போலீசில் புகார் கொடுத்தேன். இதேபோல், எனக்கு எதிராகப் பரப்பப்படும் இதுபோன்ற பொய்யானத் தகவல்களை அகற்றக்கோரி புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளேன். நான் தொடர்ந்து சரியான சட்டப் போராட்டத்தை மேற்கொள்வேன். இந்தச் சோதனை நேரத்தில் என் பக்கமிருந்த எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.