Published:Updated:

பொன்னியின் செல்வன் அறிமுகம்-2: மாவீரன்; காதலால் ஏற்பட்ட வடு; ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ஒரு பார்வை

ஆதித்த கரிகாலன்- விக்ரம்

சோழ தேசத்து பட்டத்து இளவரசர் கோப்பரகேசரி எனும் ஆதித்த கரிகால சோழன் பற்றிய ஒரு சுவாரஸ்ய அறிமுகம்.

பொன்னியின் செல்வன் அறிமுகம்-2: மாவீரன்; காதலால் ஏற்பட்ட வடு; ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ஒரு பார்வை

சோழ தேசத்து பட்டத்து இளவரசர் கோப்பரகேசரி எனும் ஆதித்த கரிகால சோழன் பற்றிய ஒரு சுவாரஸ்ய அறிமுகம்.

Published:Updated:
ஆதித்த கரிகாலன்- விக்ரம்
அமரர் கல்கியின் `பொன்னியின் செல்வன்' நாவல் பல கதாபாத்திரங்களைக் கொண்ட பிரமாண்ட நாவல். தற்போது அந்த நாவல் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. பொன்னியின் செல்வன் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரை காணக் காத்திருக்கிறது. அதையொட்டி பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான ஒரு அறிமுகம்தான் இந்த பகுதி.

பொன்னியின் செல்வன் நாவலின் மைய கதாபாத்திரம் ராஜராஜ சோழனாகிய `அருள்மொழி வர்மன்' என்றாலும் இந்த நாவலில் உள்ள எல்லாக் கதாபாத்திரங்களும் தவிர்க்க முடியாத முக்கியக் கதாபாத்திரங்கள் தான். இதில் வரலாற்றில் இருக்கும் உண்மை கதாபாத்திரங்களும், புனையப்பட்ட கதாபாத்திரங்களும் உண்டு. அந்தகவகையில் சோழ வரலாற்றில் முக்கிய மன்னராக அறியப்படும் சோழ பேரரசின் பட்டத்து இளவரசராக இருந்த ஆதித்த கரிகாலன் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

ஆதித்த கரிகாலன்- விக்ரம்
ஆதித்த கரிகாலன்- விக்ரம்
ஆதித்த கரிகாலன்... சுந்தர சோழனின் மூத்த மகன், சோழ தேசத்தின் பட்டத்து இளவரசன், அருள்மொழி வர்மன் மற்றும் குந்தவையின் அண்ணன். வாள்முனையில் சோழ தேசத்தை கட்டிக்காக்கப் பிறந்தவன்.

சோழ தேசத்தை யாரும் நெருங்க முடியாதபடி காக்கும் விதமாகவும், சோழ தேசத்தை விரிவாக்கவும் காஞ்சியில் படைதிரட்டியிருந்தார். தன் தந்தை சுந்தர சோழன், தாய் வானவன் மாதேவி இருவரும் வசிக்க தங்க மாளிகை ஒன்றை கட்டிவருவார். ஆதித்த கரிகாலனைப் பொறுத்தவரை அவன் எதைத் தொட்டாலும் அது வெற்றிதான், பல போர்களை வென்று சோழ தேசத்தை விரிவாக்கிய மாவீரன் அவன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சோழ தேசத்தை ஆளும் சுந்தர சோழர் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததால் அவரின் அரியணையைக் கைப்பற்ற துரோகமும், வஞ்சகமும் சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால், ஆதித்த கரிகாலன் என்ற ஒற்றைப் பெயர் சோழ அரியணையை யாரும் நெருங்க முடியாதபடி காத்திருந்தது. இப்படி மாவீரனாக, அவன் பெயர் கேட்டாலே எதிரிகளும், வஞ்சகர்களும் தொடை நடுங்கும் வண்ணம் இருந்த ஆதித்த கரிகாலனின் ஒரே பலவீனம் காதல், நந்தினி. ஆயிரம் யானைகள் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் அவன் மனதில் எப்போதும் காதலையும், வலியையும் சுமந்தபடி இருந்தவன் ஆதித்த கரிகாலன். தனது சலனமான மனதை வைத்து எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாதபடி காதலுக்கும், போர்க்களத்துக்கும் நடுவே மாட்டிக்கொண்டு திண்டாடியவன்.

ஆதித்த கரிகாலன்- விக்ரம், நந்தினி- ஐஸ்வர்யா ராய்.
ஆதித்த கரிகாலன்- விக்ரம், நந்தினி- ஐஸ்வர்யா ராய்.

ஆதித்த கரிகாலனுக்கு வரலாற்றில் இன்னொரு பெயரும் உண்டு. பாண்டிய மன்னனான வீரபாண்டியனை வெல்வதற்கு சோழர்கள் பலமுறை முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது பெரும் கனவாகவே இருந்தது. இந்த நிலையில் ஆதித்த கரிகாலன் பிறந்த போதே பாண்டியர்களை, குறிப்பாக வீரபாண்டியனை வெல்வதற்காகப் பிறந்தவன் என்று சொல்லி வளர்க்கப்பட்டவன் ஆதித்த கரிகாலன். அதற்கேற்ப சோழர்களால் வெல்ல முடியாத வீரபாண்டியனை போர்க்களத்தில் வென்று வீரபாண்டியனின் தலையை ஊர்வலமாகக் கொண்டு வந்தான். இதனால் 'வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்று வரலாற்றில் பெயர் பெற்றான். இந்த போர்க்களமும், ஆதித்த கரிகாலனின் போர் தந்திரமும் வீரமும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

வரலாற்றில் அசைக்கமுடியாத மாவீரனாகக் கருதப்படும் ஆதித்த கரிகாலன் தனது காதல் நாயகியான நந்தினியை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தபோது கொல்லப்படுகிறான். அவனைக் கொன்றது பாண்டிய மன்னனின் மகளாகிய நந்தினியா?, நந்தினியின் கணவரான பழுவேட்டரையரா?, பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஆபத்துதவிகளா? அல்லது அவனது உற்றத் தோழனான வந்தியத் தேவனா? என்று தெரியவில்லை.

வானளவில் படைகள் சூழ்ந்த போர்க்களத்தில் கம்பீரமாக நின்ற ஆதித்த கரிகாலனின் மரணம் ஒரு சிறிய இருண்ட அறையில் நிகழ்ந்தது இன்றளவும் ஒரு மர்மாகவே இருந்து கொண்டிருக்கிறது.

படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்திருக்கிறார். நாவலின் இந்த அம்சங்கள் அனைத்தும் அப்படியே படமாக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமென்ட்டில் பதிவிடவும்.

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த விகடன், இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் மீண்டும் நம் வாசகர்களை வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்.