Published:Updated:

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு; தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட் இதுதான்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் பாகம் - 1 திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தேதியை அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு; தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அப்டேட் இதுதான்!

பொன்னியின் செல்வன் பாகம் - 1 திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா தேதியை அறிவித்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

Published:Updated:
பொன்னியின் செல்வன்

1950 -களில் பத்திரிக்கைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமரர் கல்கியின் புகழ் பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியிருக்கிறார். பொன்னியின் செல்வன் வர்ணனைகளைக் கண்டு வியந்த எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். சில காரணங்களால் அது நடக்கவில்லை. இதேபோல் கமலும் இக்கதையைப் படமாக எடுக்க முயற்சித்தார். தற்போது மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். `பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. செப்டம்பர் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் - 1 திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை(ஜூலை 8) 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவிருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.