Published:Updated:

விருதுநகர்: தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை எரிக்க முற்பட்டபோது தீ விபத்து - தொழிலாளி உடல் கருகி பலி!

பலி
News
பலி

விருதுநகர் அருகே செயல்பட்டுவரும் தீப்பெட்டி ஆலையில் கழிவுகளை எரிக்க முற்பட்டபோது தீ விபத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்.

விருதுநகர் அருகே வளையப்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் தீப்பெட்டி ஆலையில், கழிவுகளை எரிக்க முற்பட்டபோது தீ விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியானார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் விசாரிக்கையில், "வளையப்பட்டி பகுதியில் பத்மநாபன் என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கிவருகிறது. இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில், ஆலையில் தினசரி சேரும் கழிவுகளை அந்தப் பகுதியிலுள்ள இடத்தில் கொட்டி எரிப்பதை ஆலை நிர்வாகத்தினர் வழக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதேபோல நேற்றும், கழிவுகளை எரிப்பதற்காக கூத்திப்பாறைப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற தொழிலாளி தீப்பெட்டி கழிவுகளை எடுத்துச் சென்றிருக்கிறார். அப்போது, கழிவுகளைக் கொட்டி எரிக்க முயன்றதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, முருகன் மீதும் தீ பரவியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர்: தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை எரிக்க முற்பட்டபோது தீ விபத்து - தொழிலாளி உடல் கருகி பலி!

இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட முருகனின் உறவினர்கள், இழப்பீடு கேட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாங்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, முருகனின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து முருகனின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான புகாரின்பேரில், வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.