Published:Updated:

பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ரகசிய அறைகள் கண்டுபிடிப்பு!

Vikatan Correspondent
பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ரகசிய அறைகள் கண்டுபிடிப்பு!
பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ரகசிய அறைகள் கண்டுபிடிப்பு!

மதுரை: கிரானைட் குவாரி முறைகேடு புகாருக்கு உள்ளான பி.ஆர்.பி. கிரானைட்  குவாரியில் ரகசிய அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் 90 கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம்  கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
குவாரிகளில் சட்ட விரோதமாக கிரானைட் குவாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.6  ஆயிரம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இன்னும் சுமார் 60 ஆயிரம் கற்கள் அளவிட வேண்டியதுள்ளது.இதற்கான பணி நடந்து  வருகிறது.
 
கிரானைட் குவாரிகளில் நடந்த மோசடிகளை துல்லியமாக கணக்கிட சென்னை அண்ணா  பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி பிரிவு விஞ்ஞானிகள் வடிவமைத்த ஆளில்லா  நவீன விமானம் வரவழைக்கப்பட்டு நேற்று இடையப்பட்டி பகுதியில் சோதனை  நடத்தப்பட்டது.

பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் ரகசிய அறைகள் கண்டுபிடிப்பு!

இந்த ஆளில்லா விமானத்தில் நவீன கேமரா, ரேடார், ஜி.பி.எஸ். கருவிகளும்  பொருத்தப்பட்டன. இந்த விமானத்தை ரிமோட் மூலம் கீழிருந்து இயக்கி குவாரிகள்  முழுவதையும் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு படம் பிடிக்கப்பட்டது.இந்த படங்கள்  உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன.
 

##~~##
ஒரு புகைப்படத்தில் பி.ஆர்.பி. கிரானைட் குவாரிக்குள் ஒரு ரகசிய அறை இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது.அந்த அறையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா  உத்தரவிட்டதையடுத்து, ராட்சத கற்களுக்கு இடையே குகை போல அமைக்கப்பட்ட அந்த  ரகசிய அறையை கண்டுபிடித்து அதிகாரிகள் உள்ளே சென்றனர்.
 
அங்கு 3 லாக்கர்கள் இருந்தன.அவை ஒவ்வொன்றும் 6 அடி உயரத்திற்கு இருந்தது.  அந்த லாக்கரை அதிகாரிகள் உடைத்தனர்.அதற்குள் ஒன்றுமில்லை.
ரகசிய அறைக்கு வெளியே ராட்சத கிரானைட் கற்களுக்கு இடையே 2 அடி உயர  இன்னொரு பெட்டி இருந்தது.அந்த பெட்டியை அதிகாரிகள் உடைத்து பார்த்தபோது மதுரை  காமராஜர் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் வெற்று  விடைத்தாள்கள் இருந்தன.
 
இவற்றில் சில தாள்களில் மாணவர்களின் புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தது.250  விடைத்தாள்களை கைப்பற்றிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குவாரியில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த விடைத்தாள்கள் மூலம் முறைகேடாக தேர்வு  எழுதி பல்கலைக்கழக சான்றிதழ்களை பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம்  ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழகத்தில் விசாரணை நடத்த   உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதனிடையே ரகசிய அறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட லாக்கர்களில் பலகோடி ரூபாய்  பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்திருக்கலாம் என்றும், இந்த பணம் மற்றும்  ஆவணங்களை வேறு இடத்திற்கு கடத்தி சென்று இருக்கலாம் என்றும் அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்துள்ளது.
 
எனவே இன்று 2-வது நாளாக ஆளில்லா நவீன விமானம் மூலம் பல்வேறு இடங்களில்  சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 
கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மீது ஏற்கனவே 11 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது.நேற்று குவாரியில் பிடிபட்ட பல்கலைக்கழக விடைத்தாள் தொடர்பாக   போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.