Published:Updated:

கூடங்குளம்: மக்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்!

Vikatan Correspondent
கூடங்குளம்: மக்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்!
கூடங்குளம்: மக்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்!
கூடங்குளம்: மக்கள் மீதான தாக்குதலுக்கு சீமான் கண்டனம்!

சென்னை: கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது  காவல்துறை தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சித்  தலைவர் சீமான்,கூடங்குளம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தமது கட்சி  உறுதுணையாக நிற்கும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணு  உலையால் தங்களுடைய வாழ்விற்கும் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது  என்கிற காரணத்திற்காக ஓராண்டு காலத்திற்கு மேலாக ஜனநாயக வழியில் போராடிய  அம்மக்கள் நேற்றில் இருந்து அமைதி வழியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில்  இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தங்கள் அச்சத்தை மத்திய மாநில அரசுகள்  போக்கவேண்டும் என்பது தான் அவர்களின் அடிப்படை கோரிக்கை. அந்த நியாயமான  கோரிக்கையை கூட நிறைவேற்ற மறுத்தது மட்டுமின்றி அணு உலையை இயக்க  முற்பட்டது தவறான நடவடிக்கை.

##~~##
இந்த நிலையில் அமைதியான வழியில் மறியல் போராட்டம் நடத்திய அம்மக்கள் மீது  பல்லாயிரக்கணக்கில் காவல்துறையினரையும் அதிரடிப்படையினரையும் ஏவிவிட்டு  அவர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பது  கண்டனதிற்குரியதாகும்.
அமைதிவழியில் ஜனநாயகமுறையில் போராடிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள  இந்த வன்முறை அந்த மக்களை வன்முறை பாதையில் தள்ளிவிடும் நடவடிக்கையாகும்.  அமைதி வழியில் போராடும் ஜனநாயக உரிமைகளை அரச படைகளை ஏவி, அடக்க  முற்படுவது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுவதற்கு பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கும்  என்பதை எச்சரிக்கையோடு நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது
தமிழக அரசின் இந்த காட்டுமிராண்டிதனத்தை கண்டிக்கும் அதே வேளையில்,  இதற்கெல்லாம் தீர்வு தங்கள் அரசியலை தாங்களே நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள்  உருவாகி தமிழர் அரசை நிறுவுவது தான் என்று நாம் தமிழர் கட்சி அறிவுறுத்தி நிற்கிறது.
கூடங்குளம் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்துவரும் நாம்  தமிழர் கட்சி அவர்களின் மீது அடக்குறை ஏவிவிட்ட இந்த இக்கட்டான கட்டத்திலும்  அவர்களின் போராட்டத்திற்கு உறுதியாக துணை நிற்கும் "என்று கூறப்பட்டுள்ளது.