Published:Updated:

கூடங்குளம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கூடங்குளம்:  துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் பலி!
கூடங்குளம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
கூடங்குளம்:  துப்பாக்கிச் சூட்டில்  ஒருவர் பலி!

நெல்லை: கூடங்குளம் கடற்கரையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அறிந்து, போராட்டம் வடத்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

கூடங்குளம் கடற்கரையில் நேற்று போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை அறிந்து மணப்பாடு மீனவர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஆவேசத்துடன் அவர்கள் திரண்டு மெயின்ரோடு பகுதிக்கு வந்தனர். சாலைகளில் மரக்கட்டைகள், பெரிய கற்களை போட்டு அடைத்தனர்.

குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையம் சார்பில் அந்த பகுதியில் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அந்த சோதனை சாவடிக்கு திடீர் என்று தீ வைக்கப்பட்டது. எனவே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால், அவர்கள் கலைந்து போக மறுத்து போலீசார் மீதும் கல்வீசினர்.

இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மீனவர் ஒருவர் காயம் அடைந்தார். மற்றவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். காயம் அடைந்தவர் உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

##~~##
இறந்தவர் பெயர் அந்தோணி ஜான் (47). ஞானபிரகாசம் என்பவருடைய மகன் ஆவார். இவர் மணப்பாடு கிராமத்தில் ராஜா தெருவைச் சேர்ந்த மீனவர் ஆவார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது.
போலீஸ் துப்பாக்கி சூடு காரணமாக மணப்பாடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது

ரூ. 5 லட்சம் நிவாரணம்
இதனிடையே துப்பாக்கிச் சூட்டில் பலியான .அந்தோணி ஜானுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலைதா அறிவித்துள்ளார்.