Published:Updated:

சரணடையவிடாமல் உதயகுமாரை தூக்கிச் சென்ற இளைஞர்கள்.!

 சரணடையவிடாமல் உதயகுமாரை தூக்கிச் சென்ற இளைஞர்கள்.!
சரணடையவிடாமல் உதயகுமாரை தூக்கிச் சென்ற இளைஞர்கள்.!
 சரணடையவிடாமல் உதயகுமாரை தூக்கிச் சென்ற இளைஞர்கள்.!

நெல்லை:சரணடைய வந்த உதயகுமாரை ஆதரவாளர்கள் குண்டுகட்டாக தூக்கிச் சென்று  படகில் வேறு ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், உதயகுமாரை பிடிக்க  போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 
 
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிராக, நேற்று முன் தினம்  நடந்த  போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.இது  தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், முக்கிய தலைவர்  ஒருவர் முன்னிலையில் நேற்று கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண்  அடையப்போவதாக கூறினார்.
 
இந்நிலையில், தடியடியை கண்டித்து இடிந்தகரை கிராம மக்கள்,நேற்று முன் தினம்  மாலை முதல் 48 மணி நேர உண்னாவிரத போராட்டத்தை  தொடங்கினர்.

இதனிடையே உதயகுமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ள   காவல்துறையினர்,அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில்,நேற்று மாலை 4.30 மணி   அளவில் இடிந்தகரை வந்த உதயகுமார்,லூர்து அன்னை ஆலயம் முன்  அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலில் பொதுமக்களோடு இணைந்து கொண்டார்.

##~~##
பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், "நான் தேசத் துரோகம்  செய்துவிட்டதாக காவல் துறை குற்றஞ்சாட்டுகிறது. அணுஉலையால் ஏற்படும் தீமைகள்  குறித்து நான் படித்து அறிந்தவற்றைத்தான் சொன்னேன்.அது தேசத் துரோகம் என்றால்  அப்படியே இருக்கட்டும்” என்று கண்ணீர் மல்க பேசினார்.
இதைப் பார்த்ததும் கூடியிருந்த ஆண்களும் பெண்களும் கதறி அழுது அவரை நெருங்கி,  உங்களைக் கைதாகவிட மாட்டோம் எனக் கூறினர்.இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை  ஏற்பட்டது.
இந்நிலையில்,கூட்டத்தின் மத்தியிலிருந்து திடீரென உதயகுமாரை நெருங்கிய 5  இளைஞர்கள், உங்களைக் கைதாகவிடமாட்டோம் எனக் கூறி, அவரை அப்படியே  தூக்கிக் கொண்டு சென்றனர்.
ஆலயம் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்  உள்ள கடற்கரைக்கு உதயகுமாரை தூக்கிச் சென்ற இளைஞர்கள், அங்கு தயாராக இருந்த  என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகில் ஏற்றி கடலுக்குள் விரைந்தனர். போராட்டக் குழு  ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புஷ்பராயனையும் இளைஞர்கள் அழைத்துச் சென்று  மற்றொரு படகில் ஏற்றி கடலுக்குள் சென்றனர்.இந்த இரு படகுகளுக்குப் பாதுகாப்பாக  மேலும் 3 படகுகளும் கடலுக்குள் விரைந்தன.

நெருங்கிய அதிரடிப்படை
இதற்கிடையே, இடிந்தகரையில் உதயகுமார் இருந்த விஷயத்தை அறிந்த ஒரு எஸ்.பி.  தலைமையிலான 100 பேரை கொண்ட அதிரடிப் படை கடற்கரை வழியாக  இடிந்தகரையை நோக்கி பதுங்கிப் பதுங்கி நெருங்கியது.இதையறிந்துதான்  உதயகுமாரையும் புஷ்பராயனையும் இளைஞர்கள் கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டதாகக்  கூறப்படுகிறது.
உதயகுமார் சரணடைய கூடாது: கெஜ்ரிவால்
இந்நிலையில்,ஊழலுக்கு எதிராக போராடி வருபவரும்,சமூக ஆர்வலருமான அரவிந்த்  கெஜ்ரிவால் நேற்று இரவு இடிந்தகரை வந்தடைந்தார்.
 
அப்போது நிருபர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை  அணு உலை நிர்வாகம் கடைபிடிக்கவில்லை.அதையும் மீறி அணு உலையில் எரிபொருள்  நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.உதயகுமார் சரணடைய தேவையில்லை” என்று  கூறினார்.

இன்று சரண்?
இந்நிலையில் உதயகுமார் இன்று சரணடையக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற மற்றொரு  தகவல் தெரிவிக்கிறது.