Published:Updated:

விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு!

விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு!
விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு!
விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு!

சென்னை:  5 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று கரைக்க இருப்பதால் சென்னை நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 19-ந்தேதி சென்னையில் 6500 இடங்களில் பூஜைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கு போலீசார் நேற்று முதல் அனுமதி வழங்கினர்.

இதன்படி நேற்று பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி சார்பில் சென்னையில் இன்று 3 இடங்களில் இருந்து ஊர்வலம் நடத்தப்பட்டது.

திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வரன் பேட்டை பிள்ளையார் கோவில் அருகில் இருந்து, இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் தலைமையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சுமார் 1000 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

இதேபோல் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம், பாரிமுனை முத்துசாமி பாலம் ஆகியவற்றின் அருகில் இருந்தும், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் இன்று 5 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதேபோல் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் ஊர்வலத்தையொட்டி சென்னையில், 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.