Published:Updated:

தரை தட்டிய சரக்குக் கப்பல் கேப்டனிடம் விசாரணை!

தரை தட்டிய சரக்குக் கப்பல் கேப்டனிடம் விசாரணை!
தரை தட்டிய சரக்குக் கப்பல் கேப்டனிடம் விசாரணை!
தரை தட்டிய சரக்குக் கப்பல் கேப்டனிடம் விசாரணை!

சென்னை: சென்னையில் தரைதட்டிய சரக்குக் கப்பலின் கேப்டனிடம், இந்த விபத்து  குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

மும்பையைச் சேர்ந்த சரக்குக் கப்பலான பிரதிபா காவேரி கப்பல் கடந்த புதனன்று டீசல்  தீர்ந்து போனதால் நடுக்கடலில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் புயல் காரணமாக  சென்னை அருகே தரைதட்டிய நிலையில், அதில் இருந்து தப்பிக்க கடலில் குதித்த 6  மாலுமிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்கு கப்பலின் கேப்டனே பொறுப்பு என்று கூறப்படுகிறது.

அதாவது, சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்பு படகில்,கப்பலில் இருந்த உயர்  அதிகாரிகளை அனுப்பாததுமே,புயல் கரையை கடக்கும் வரை கப்பலில் இருக்கும்படி  கப்பல் நிர்வாகம் அளித்த அறிவுரையை மீறியதாகவும்,அவர் மீது  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

##~~##
இந்நிலையில் கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், எவ்வித  பாதுகாப்பு கவசமும் அணியாமல் கடலில் மாலுமிகள் குதிக்க அனுமதித்தது எவ்வாறு  என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கப்பலில் சோதனை
மேலும் தரைதட்டிய அந்த கப்பலில் சோதனை நடத்தவும் போலீசார் முடிவு  செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.