Published:Updated:

தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் பணியிட மாற்றம்!

தென்மண்டல  ஐஜி ராஜேஷ் தாஸ் பணியிட மாற்றம்!
தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் பணியிட மாற்றம்!
தென்மண்டல  ஐஜி ராஜேஷ் தாஸ் பணியிட மாற்றம்!

சென்னை: தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் உள்ளிட்ட 5

தென்மண்டல  ஐஜி ராஜேஷ் தாஸ் பணியிட மாற்றம்!

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஜி ராஜேஷ் தாஸ் தென் சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 ராஜேஷ் தாஸ்க்குப் பதிலாக சென்னை நகர காவல்துறையின் குற்றவியல் பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த அபய்குமார் சிங், தென்மண்டல ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த கருணாசாகர், சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர போலீஸ் தலைமையகத்தில் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய சுனில்குமார் சிங்,நெல்லை போலீஷ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா,சென்னை மாநகர காவல்துறை தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

சர்ச்சையில் சிக்கிய ராஜேஷ் தாஸ்

,கடந்த காலங்களில் நடைபெற்ற முல்லைப் பெரியார் அணை தொடர்பான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் மற்றும் பரமக்குடி போலீஸ் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களில் நிலைமையை சரிவர கையாள தவறியதாக, தென்மண்டல ஐஜியாக பணியாற்றி வந்த ராஜேஷ் தாஸ மீது புகார் எழுந்தது.

குறிப்பாக முல்லைப் பெரியார் அணை பிரச்னையில்,  கேரளாவுக்கு எதிராக தென் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, இவர் கேரளாவுக்கு ஆதரவாக, போராட்டக்காரர்களை மிரட்டும் வகையில் நடந்துகொண்டதாக சர்ச்சையில் சிக்கியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.