Published:Updated:

தீபாவளி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!

Vikatan Correspondent
தீபாவளி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!
தீபாவளி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!
தீபாவளி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!

சென்னை: தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ளவர்களும்,அண்டை மாநிலங்களில் உள்ள தமிழர்களும் அவரவர் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட படையெடுத்துள்ளனர்.மக்களின் உற்சாக வெள்ளம் ஒருபுறம் இருக்க, விபத்து இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட, தீயணைப்பு துறையும், போலீஸ் துறையும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

1 லட்சம் போலீசார் பாதுகாப்பு


விபத்து இல்லாத தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திடுமாறு,அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

##~~##
இதனால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையிலும் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பட்டாசு தீ விபத்தினால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு படையினருடன், அதிரடிப்படை போலீசாரும், ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மக்கள் தங்கள் உதவிக்கு 100 மற்றும் 101 டெலிபோன் எண்ணில் பேசினால், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மின்னல் வேகத்தில் பாய்ந்து வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, பட்டாசை வெடித்து, மக்கள் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.