Published:Updated:

கிரெடிட் கார்டு மோசடியை தடுப்பது எப்படி?:காவல் துறையின் உஷார் 'டிப்ஸ்’!

கிரெடிட் கார்டு மோசடியை தடுப்பது எப்படி?:காவல் துறையின் உஷார் 'டிப்ஸ்’!
கிரெடிட் கார்டு மோசடியை தடுப்பது எப்படி?:காவல் துறையின் உஷார் 'டிப்ஸ்’!
கிரெடிட் கார்டு மோசடியை தடுப்பது எப்படி?:காவல் துறையின் உஷார் 'டிப்ஸ்’!

சென்னை:  கிரெடிட் கார்டு மோசடியை தடுப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு  சென்னை காவல்துறை சில உஷார் 'டிப்ஸ்’களை அளித்துள்ளது.

போலி கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பொதுமக்களின் பணத்தை  சுருட்டும் கும்பலின் கைவரிசையிலிருந்து தப்பிக்க,சென்னை காவல்துறை ஆணையர்  அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சில முன்னெச்சரிக்கை யோசனைகள்:

* பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின்  ரகசிய குறியீட்டு எண்களை யார் கேட்டாலும் கொடுக்கக்கூடாது. வங்கி வாடிக்கையாளர்  மையத்தில் இருந்து பேசுகிறோம் என்று யாராவது போனில் அழைத்தால் உஷாராக இருக்க  வேண்டும்.

* டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை அடிக்கடி  மாற்ற வேண்டும்.

* ஏ.டி.எம். மையத்தில் சென்று பணம் எடுக்கும் போது ஏ.டி.எம். எந்திரத்தில் வேறு  ஏதும் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

##~~##
* தங்களுடைய செல்போன் எண்களை வங்கியில் கொடுத்து, பண பரிமாற்றங்களை  எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளும் வசதியை பொதுமக்கள் ஏற்படுத்திக்  கொள்ளவேண்டும்.
* தேவையில்லாமல், சர்வதேச கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை அதிகம்  வாங்கி வைத்துக் கொள்ளக்கூடாது.
* ஜவுளிக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட் கார்டுகளை  கொடுக்கும்போது ஒருமுறைதான் தேய்க்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டும்.
* நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அடுத்தவர்களிடம் தங்களது கார்டுகளை  கொடுக்கக்கூடாது.
* போலி கார்டு மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடியாக தங்களது  கார்டின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.