Published:Updated:

13 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு;இடமாற்றம்!

13 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு;இடமாற்றம்!
13 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு;இடமாற்றம்!
13 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு;இடமாற்றம்!

சென்னை: தமிழக காவல்துறையில் நரேந்திர பால்சிங்  உள்ளிட்ட 3 ஏடிஜிபிக்கள்  டிஜிபி-க்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு,பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி ஏடிஜிபி-யாக பணியாற்றி வந்த நரேந்திர பால்சிங்,கிரைம் டிஜிபி-யாக பதவி  உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேப்போன்று கிரைம் ஏடிஜிபி-யாக பணியாற்றி வந்த அனுப்ஜெய்ஸ்வால் காவலர் வீட்டு  வசதி வாரிய டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

##~~##
காவலர் அகாடமி ஏடிஜிபி அர்ச்சனா, சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி-யாக  நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர கன்னியாகுமரி,திருவண்ணாமலை,மதுரை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் பணியாற்றி வரும் 10 ஏ.டி.எஸ்.பி.க்களும், எஸ்.பி.க்களாக பதவி  உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.