Published:Updated:

சேலம் சிறையில் அதிரடி சோதனை: செல்போன்கள்,கஞ்சா,பீடி பறிமுதல்

சேலம் சிறையில் அதிரடி சோதனை: செல்போன்கள்,கஞ்சா,பீடி பறிமுதல்
சேலம் சிறையில் அதிரடி சோதனை: செல்போன்கள்,கஞ்சா,பீடி பறிமுதல்
சேலம் சிறையில் அதிரடி சோதனை: செல்போன்கள்,கஞ்சா,பீடி பறிமுதல்

சேலம்: சேலம் மத்திய சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்  செல்போன்கள்,கஞ்சா,பீடி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 

சேலம் மத்திய சிறையில் கடந்த சில நாட்களாக கைதிகளிடம் இருந்து அடிக்கடி  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
மேலும் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களும் கைதிகளிடம் இருந்தது  தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைதிகள் சிலர் உயரமான  கட்டிடங்களில் ஏறிக் கொண்டு, பூரி தயாரித்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை  விடுத்து தற்கொலை மிரட்டலும் விடுத்தனர்.

தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு  தீவிர சோதனை நடத்த சிறைத்துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில் சிறையில் சோதனை நடத்த சென்னையில் இருந்து சிறைத்துறை  விஜிலென்ஸ் போலீசார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் தலைமையில் சேலம் வந்தனர்.  அவர்கள் மாநகர போலீசாரின் உதவியோடு சோதனை நடத்த முடிவு செய்தனர்.
 

##~~##
அதன்படி இன்று வடக்கு உதவி கமிஷனர் தங்கத்துரை தலைமையில் அனைத்து உதவி  கமிஷனர்கள், மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென அதிகாலை 5-30 மணிக்கு சேலம் மத்திய  சிறைக்குள் சோதனை நடத்த சென்றனர் போலீசார் திடீரென உள்ளே நுழைந்ததால்  சிறைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
போலீசார் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர்.இந்த சோதனை காலை 9  மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில்  சிறைகைதிகளிடம் இருந்து 2 செல்போன, ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், 6  சிம்கார்டு, 151 பீடி, 49 சிகரெட், 10 கிராம் கஞ்சா, 2 சார்ஜர் ஆகியவை  கைப்பற்றப்பட்டதாக  கூறப்படுகிறது.