Published:Updated:

முடிவெட்ட மறுத்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு!

முடிவெட்ட மறுத்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு!
முடிவெட்ட மறுத்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு!
முடிவெட்ட மறுத்த குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு!

மதுரை: மதுரை சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி சிதம்பரத்தின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள சின்னப்பட்டி கிராம மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவர் சிதம்பரம்.வயதான காரணத்தால் தொடர்ந்து வேலை செய்ய இயலவில்லை எனக் கூறியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த ஊர் மக்கள், இவரது மருமகனை அவருக்கு பதிலாக ஊரில் இருப்பவர்களுக்கு முடி திருத்தும் தொழிலை செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஊரில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து சிதம்பரம் குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளி வைத்தாகவும், சிதம்பரம் வீட்டில் தாக்குதல் நடத்தி வீட்டை சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது.

##~~##
இது தொடர்பாக சிதம்பரம் காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சில அமைப்பினர் இந்த பிரச்னையை கையிலெடுத்து உள்ளனர்.
சிதம்பரத்தின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை பழங்காநத்ததில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.