Published:Updated:

நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு போலீஸ் சம்மன்!

நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு போலீஸ் சம்மன்!
நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு போலீஸ் சம்மன்!
நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு போலீஸ் சம்மன்!

மேலூர்: கிரானைட் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி நாளை  எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராக  வேண்டும் என்று மேலூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சம்மன் வழங்கியுள்ளார்.

கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பான வழக்கில் ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின்  பங்குதாரர் துரை தயாநிதி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதனையடுத்து  கைதாகாமல் தவிர்ப்பதற்காக தலைமறைவான அவர், நீண்ட போராட்டத்திற்கு பின்னர்  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் பெற்றார்.

##~~##
நீதிமன்ற உத்தரவுப்படி அவர் தினமும் கீழவளவு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து  போட்டு வந்த நிலையில் துரை தயாநிதிக்கு சம்மன் அனுப்பி மீண்டும் விசாரணை நடத்த  தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.
இந்நிலையில் துரை தயாநிதி வழக்கம்போல் இன்று காலை 10.30 மணி அளவில்  காரில் கீழவளவு போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போடவந்தார். அப்போது மேலூர்  இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் துரை தயாநிதியிடம் சம்மன் ஒன்றை வழங்கினார்.
அதில், நாளை காலை 11 மணி அளவில் காவல்துறை எஸ்.பி. அலுவலகத்தில்  நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.