Published:Updated:

விழுப்புரம்,காஞ்சிபுரம்,திருவாரூர் போலீஸ் எஸ்.பி.க்கள் மாற்றம்!

விழுப்புரம்,காஞ்சிபுரம்,திருவாரூர் போலீஸ் எஸ்.பி.க்கள் மாற்றம்!
விழுப்புரம்,காஞ்சிபுரம்,திருவாரூர் போலீஸ் எஸ்.பி.க்கள் மாற்றம்!
விழுப்புரம்,காஞ்சிபுரம்,திருவாரூர் போலீஸ் எஸ்.பி.க்கள் மாற்றம்!

சென்னை: திருவாரூர்,விழுப்புரம்,காஞ்சிபுரம் போலீஸ் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 6  ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கல்ராஜ் மகேஷ் குமார் திருவாரூர்  மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாகவும்,இதுவரை அப்பதவியிலிருந்த எஸ். சேவியர் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாகவும், இதுவரை அப்பதவியை வகித்த எஸ். மனோகரன் விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக இதுவரை இருந்த என். பாஸ்கரன் மாநில  மனித உரிமைகள் ஆணையத்தின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

##~~##
மேலும் இதுவரை கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த எஸ். மணி ஐபிஎஸ்,  சென்னை பொருளாதார குற்றவியல் பிரிவு- II ன் எஸ்.பி.யாகவும், இதுவரை  அப்பதவியிலிருந்த பி.ஆர். வெண்மதி, காவல்துறை தலைமை அலுவலகமான டிஜிபி  அலுவலகத்தில் உதவி ஐஜி-யாக நியமிக்கப்படுவதாக தமிழக அரசின் உள்துறை  முதன்மை செயலர் ஆர்.ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவிக்கபப்ட்டுள்ளது.