Published:Updated:

டி.டி.எச் விவகாரம்: மிரட்டல் வருவதாக கமலஹாசன் டி.ஜி.பி.யிடம் புகார்

டி.டி.எச் விவகாரம்: மிரட்டல் வருவதாக கமலஹாசன் டி.ஜி.பி.யிடம் புகார்
டி.டி.எச் விவகாரம்: மிரட்டல் வருவதாக கமலஹாசன் டி.ஜி.பி.யிடம் புகார்
டி.டி.எச் விவகாரம்: மிரட்டல் வருவதாக கமலஹாசன் டி.ஜி.பி.யிடம் புகார்

சென்னை:விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவது தொடர்பாக தமக்கு மிரட்டல் வருவதாக நடிகர் கமல்ஹாசன் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யிடம் இன்று புகாரி அளித்தார்.

நடிகர் கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படம் வருகிற 10 ஆம் தேதி இரவு ஏர்டெல் டிஜிட்டல் டி.வி., ரிலையன்ஸ் பிக் டி.வி., டாடாஸ்கை, வீடியோகான், டிஷ் டி.வி., சன் ஆகிய 6 டி.டி.எச்.களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரைப்பட விநியோகச்தர்கள் நடிகர் கமலஹாசனின் இந்த புதிய முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் இன்று டி.ஜி.பி. அலுவலகத்துக்கு திடீரென வந்தார். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து விஸ்வரூபம் படம் தொடர்பாக தமக்கு மிரட்டல் வருவதாக ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதன் பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"நேர்மையான முறையில் நான் தொழில் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விஸ்வரூபம் படம் திட்டமிட்டப்படி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும். மறுநாளில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் அந்த படம் திரையிடப்படும்.தியேட்டர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம்.

டி.டி.எச்.சில் விஸ்வரூபம் படம் ஒளிபரப்புவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மின்சாரத்தை தடை செய்வோம் என்று சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களது பெயர் விவரத்தை புகார் மனுவில் கூறி உள்ளேன்.

##~~##
இது தொடர்பாக உள்துறை செயலாளரையும் சந்தித்து பேச உள்ளேன்.மேலும் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது தியேட்டர்கள் மற்றும் படத்துக்கு பாதுகாப்பு அளிக்க கேட்டுள்ளேன்.
எனக்கு மிரட்டல் விடுத்தது யார்? சினிமா உலகை சேர்ந்தவர்கள் பெயர் புகார் மனுவில் இடம் பெற்றுள்ளதா? என்று கேட்கிறீர்கள்.சினிமாகாரர்களின் பெயர்களும் இருக்கலாம். நானும் சினிமாக்காரன் தானே" என்றார்.
விஸ்வரூபம் படம் கோவையில் 36 திரையரங்குகளில் திரையிடப்படும் என்று அந்த மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
மேலும் சென்னையிலும் சத்யம், தேவி, எஸ்கேப், ஐநாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரையரங்குகளில்  ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது,