Published:Updated:

ஐதராபாத் குண்டுவெடிப்பு: 2 பேர் சிக்கினர்

ஐதராபாத் குண்டுவெடிப்பு: 2 பேர் சிக்கினர்
ஐதராபாத் குண்டுவெடிப்பு: 2 பேர் சிக்கினர்
ஐதராபாத் குண்டுவெடிப்பு: 2 பேர் சிக்கினர்

ஐதராபாத்: ஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேர், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21ஆம் தேதி ஐதாராபாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 16 பேர் உயிர் இழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர்களிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த, தேசிய புலனாய்வு அமைப்புக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சையத் மக்பூல் மற்றும் இம்ரன் கான் என்கிற அந்த இரண்டு பேரும், கடந்த ஆகஸ்ட் மாதம் புனேயில் நடந்த குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

டெல்லி திகார் சிறையில் இருக்கும் இவர்கள், ஹைதராபாத் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தில்சுக் நகரில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், வேவு பார்த்ததுள்ளனர்.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை பாகிஸ்தானில் அமைத்த, ரியாஸ் பக்தல் என்பவரின் உத்தரவின் பேரில் இவ்விருவரும் இணைந்து ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கு உதவியதாக தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.