Published:Updated:

பிரதிபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் 2 பேர் கைது

பிரதிபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் 2 பேர் கைது
பிரதிபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் 2 பேர் கைது
பிரதிபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் 2 பேர் கைது

சென்னை: பிரதீபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் இரண்டு பேரை புனேவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு கோரத்தாண்டவம் ஆடிய நீலம் புயலால் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரதீபா காவேரி கப்பல் பெசன்ட் நகர் கடற்பகுதியில்  தரை தட்டியது.

##~~##
இந்த விபத்தில் கப்பல் பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சாஸ்திரி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதீபா காவேரி கப்பலின் உரிமையாளர் சுனில் பவார் மற்றும் மதன் ஆகியோரை புனேவில் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களை  நீதிமன்றத்தில் காவல்துறையில் இன்று ஆஜர்படுத்தினர்.