Published:Updated:

போலி பாஸ்போர்ட் விவகாரம்: கதி கலங்கும் காவல்துறை வட்டாரம்!

போலி பாஸ்போர்ட் விவகாரம்: கதி கலங்கும் காவல்துறை வட்டாரம்!
போலி பாஸ்போர்ட் விவகாரம்: கதி கலங்கும் காவல்துறை வட்டாரம்!
போலி பாஸ்போர்ட் விவகாரம்: கதி கலங்கும் காவல்துறை வட்டாரம்!

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் போலி பாஸ்போர்ட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில், போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

இதில், திருவாரூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டில் மட்டும் 112 இலங்கை அகதிகள் பொய்யான தகவல்களைக் கொடுத்து, போலியாக பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்தது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்திய போலீஸார், பாஸ்போர்ட்டிற்கான போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்த இரண்டு நபர்களிடம் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அவர்கள் சொன்ன தகவல்களின்படி, போலியான பள்ளிகளின் பெயரில் சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்ததும், போலியான முகவரியில் இருப்பிட ஆவணங்கள் தயார் செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தின் உண்மைத் தன்மையை விசாரித்து உறுதி செய்வது அந்தந்த வட்டார காவல் நிலையங்களின் பணி. இப்படிப்பட்ட நிலையில் போலியான முகவரிகள், போலியான பள்ளிகளின் பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் எப்படி போலீஸாரின் கண்களுக்குத் தெரியாமல் போனது? இந்த மோசடி அவர்களின் துணையுடனேயே நடந்திருக்குமோ? என்ற பேச்சு திருவாரூர் காவல்துறை வட்டாரத்தை கலங்கடித்து வருகிறது.

கு.ராமகிருஷ்ணன்.