Published:Updated:

கலெக்டருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்!

கலெக்டருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்!
கலெக்டருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்!
கலெக்டருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் பஸ் ஸ்டாண்ட், வீரராகவசுவாமி கோயில் மற்றும் திருவள்ளூர் நீதிமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கலெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதத்தால் போலீஸார் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவுக்கு நேற்று ஒரு கடிதம் வந்தது. அதனைப் பிரித்து படித்துப் பார்த்த அவர் அதிர்ந்து போனார்.

அந்தக் கடிதத்தில், 'போலீஸ் இன்ஸ்பெக்டர் என் மீது பொய் வழக்குப் போட்டு இருக்கிறார். அது  எனக்கு அவமானமாக இருக்கிறது. அதனால், திருவள்ளூர் பஸ் ஸ்டாண்ட், வீரராகவசுவாமி கோயில், கோர்ட் ஆகிய இடங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போகிறேன்" என்று இருந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்துமாறு, மாவட்ட எஸ்.பி. ரூபேஷ்குமார் மீனாவுக்கு பரிந்துரை செய்தார்.

##~~##
இதையடுத்து, நேற்றிரவு மூன்று இடங்களிலும் ஏ.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். மிரட்டல் கடிதம் எழுதியது யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    - ப‌.கவிமணி
படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி