Published:Updated:

பி.ஆர்.பி. வீடு, அலுவலகங்களில் போலீஸ் அதிரடி சோதனை! (படங்கள்)

பி.ஆர்.பி. வீடு, அலுவலகங்களில் போலீஸ் அதிரடி சோதனை! (படங்கள்)
பி.ஆர்.பி. வீடு, அலுவலகங்களில் போலீஸ் அதிரடி சோதனை! (படங்கள்)

சென்னை: மதுரையில் பி.ஆர்.பி. வீடு, அலுவலகங்கள், மகன் வீடு உள்பட 8 இடங்களில் தனிப்படை போலீஸார் இன்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 

பி.ஆர்.பி. வீடு, அலுவலகங்களில் போலீஸ் அதிரடி சோதனை! (படங்கள்)

கிரானைட் குவாரிகளில் முறைகேடு செய்ததாக பி.ஆர்.பி.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதனிடையே, கிரானைட் முறைகேடு புகாரில் பி.ஆர்.பி மகள் சுரேஷ்குமார் உள்பட 9 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

##~~##
இந்த நிலையில், கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி. வீடு, அலுவலகங்களில் எட்டு இன்ஸ்பெக்டர்கள், 16 சப்- இன்ஸ்பெக்டர்கள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பி.ஆர்.பி. வீடு, அலுவலகங்களில் போலீஸ் அதிரடி சோதனை! (படங்கள்)

மேலும், பி.ஆர்.பி மகன் சுரேஷ்குமார், மைத்துனர் தெய்வேந்திரன் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

வீடு, அலுவலகங்களில் போலி ஆவணங்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் அண்ணாநகரி்ல் உள்ள பி.ஆர்.பி வீட்டில் சோதனை நடத்திய இன்ஸ்பெக்டர் மன்மதபாண்டியன் விகடன் டாட் காம் நிருபரிடம் கூறுகையில், "வழக்குக்கு தேவையான ஆதாரங்களை தேடி சோதனையிட வந்தோம். சோதனையில் நாங்கள் எதி்ர்பார்த்த ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை" என்றார்.

மேலும், கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி மீது 33 வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில், புதிதாக மேலும் பல வழக்குகளை பதிவு செய்வதற்கு போலீஸ் ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது.

கே.கே.மகேஷ்

படங்கள் பா.காளிமுத்து