Published:Updated:

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு 2 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் உத்தரவு!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு 2 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் உத்தரவு!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு 2 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் உத்தரவு!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு 2 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் உத்தரவு!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு 2 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் உத்தரவு!

Published:Updated:
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு 2 நாள் போலீஸ் காவல்; நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை 2 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.   

இதில் கலவரத்தைத் தூண்டியதாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும் சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கைதுசெய்வதாகச் கூறி பலரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் சட்ட ஆலோசகராக இப்போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மையத்தின்  ஒருங்கிணைப்பாளர் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், இம்மையத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்,  வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோரும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

இவர்களைக் கைது செய்ய, கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ் தனி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையிலான குழு, கடந்த 20-ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதனைக் கைதுசெய்தனர். இவர்மீது சிப்காட் காவல் நிலையத்தில் ஐ.பி.சி., 147,  148,  188,  353,  506(11), 301 போன்ற பிரிவுகளின் கீழ் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  21-ம் தேதி, வாஞ்சிநாதனை சிப்காட் காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அவரிடம் விசாரணை செய்து, தூத்துக்குடி மாவட்ட ஜே.எம்-3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை  சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கறிஞர் வாஞ்சிநாதனை போலீஸார் நேற்று  தூத்துக்குடி ஜே.எம் கோர்டில் மீண்டும் ஆஜர்படுத்தினர்.

அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க  அனுமதி கோரினர். இதனையடுத்து சிப்காட் போலீஸார், வாஞ்சிநாதனை  2 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி தமிழ்ச்செல்வி அனுமதி அளித்தார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வாஞ்சிநாதன், ”போலீஸார் தன் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர்” எனத்  தெரிவித்தார்.