Published:Updated:

200 அடகு கடைகளில் ரூ.5 கோடி மோசடியா? போலீஸ் விசாரணை

Vikatan Correspondent

சென்னை: 200 அடகு கடைகளில் கவரிங் நகையை அடகு வைத்து ரூ.5 கோடி மோசடி செய்துள்ளதாக சேலையூர் லெட்சுமி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டது.

சென்னை சேலையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர், சேலையூரில் அடகு கடையில் 32 கிராம் நகையை அடகு வைத்த போது அது கவரிங் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

##~~##
இதையடுத்து அவர் மீது சேலையூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த அடகு நகைக் கடை சேட்டுகள் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில், ‘‘சென்னையில் 200 அடகு கடைகளில் லெட்சுமியும் அவரது கும்பலும் ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இந்த புகாரை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று புகார் மனுவில் கூறியுள்ளனர்.