Published:Updated:

பரதேசி திருட்டு விசிடி: இயக்குனர் பாலா போலீஸில் புகார்

சென்னை: பரதேசி படத்தின் திருட்டு விசிடிக்களை தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாலா இன்று சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார்.

பாலா இயக்கிய பரதேசி படம், அண்மையில் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

##~~##
ஆனால், படம் வெளியான சில நாள்களிலேயே, அதன் திருட்டி விசிடிக்கள் கடைகளுக்கு வந்துவிட்டன. இதனால், பரதேசி படம் வியாபார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, இந்த விவகாரத்தில் போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து பரதேசியைக் காப்பாற்ற வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.