Published:Updated:

ராமேஸ்வரத்தில் மீன் கம்பெனிகளுக்கு தீவைப்பு: பதற்றம் (படங்கள்)

ராமேஸ்வரத்தில் மீன் கம்பெனிகளுக்கு தீவைப்பு: பதற்றம் (படங்கள்)
ராமேஸ்வரத்தில் மீன் கம்பெனிகளுக்கு தீவைப்பு: பதற்றம் (படங்கள்)

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில இருதரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 9 மீன் கம்பெனிகளுக்கு சமூக விரோதிகள் தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது.

ராமேஸ்வரத்தில் மீன் கம்பெனிகளுக்கு தீவைப்பு: பதற்றம் (படங்கள்)

ராமேஸ்வரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருந்த மீன்கம்பெனிகள் திடீரென தீ பற்றி எரிந்தன.

தகவலறிந்த போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் தீப்பிடித்த பகுதிக்கு விரைந்து வந்தனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதற்குள் 9 மீன் கம்பெனிகள் தீயில் எரிந்து நாசமாயின.

ராமேஸ்வரத்தில் மீன் கம்பெனிகளுக்கு தீவைப்பு: பதற்றம் (படங்கள்)

தங்கச்சிமடத்தை சேர்ந்த குட்வின், சேசுராஜா, மைக்கேல்ராஜ் உள்ளிட்ட 9 பேருக்கு சொந்தமான இந்த கம்பெனிக்குள் இருந்த மீன்பிடி சாதனங்கள், வலைகள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

##~~##
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகளில் ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சமூக விரோதிகள், சமீபத்தில் நடந்த கலவரத்திலிருந்து போலீஸாரின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் மீன் கம்பெனிகளுக்கு தீவைப்பு: பதற்றம் (படங்கள்)

முன்னதாக கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லி ஒரு தரப்பினரை மட்டும் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கலவரத்தில் தொடர்பு இல்லாதவர்களை கைது செய்வதை நிறுத்த கோரியும் அந்த தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தையும், வட்டாட்சியர் அலுவலகத்தையும் நேற்று மாலை முற்றுகையிட்டனர்.

அங்கு வந்த போலீஸார் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து  அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த தரப்பின் பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கை தொடர்பாக வட்டாட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்து சென்றனர்.

இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி