Published:Updated:

ஃபைன் பியூச்சர் நிறுவன உரிமையாளரின் ரூ.2 கோடி மதிப்புள்ள கார் பறிமுதல்

கோவை ஃபைன் பியூச்சர் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சொகுசு காரை திருப்பூர் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

கோவை, பீளமேட்டைத் தலையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஃபைன் பியூச்சர் நிறுவனம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3000 முதலீட்டாளர்களிடம் 800 கோடி ரூபாய் மோசடி செய்தது.

முதலீட்டாளர்கள் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் 7 கட்டிடங்கள், 9 கிலோ தங்கம், 8 சொகுசு கார்களை ஏற்கனவே போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர்.

##~~##
மேலும், ஃபைன் பியூச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில், உதய், நித்தியானந்தன் ஆகியோரையும் போலீஸ் கைது செய்தது.
இந்த நிலையில் இன்று காலை ஃபைன் பியூச்சர் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான விவேக் என்பவரின் நண்பர் பெயரில், டெல்லியில் பதிவு செய்யப்பட்ட சொகுசு காரை, சாய்பாபா காலணியில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
‘மோசடி செய்த பணத்தில், திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் விளைநிலங்களாக வாங்கி அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் முதலீடு செய்துள்ளனர். அவற்றையும் போலீஸார் கையகப்படுத்த வேண்டும்’ என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.