Published:Updated:

ஆம்னி பேருந்தில் சென்னை வந்த வியாபாரியிடம் 7.5 கிலோ தங்ககட்டி அபேஸ்

ஆம்னி பேருந்தில் சென்னை வந்த வியாபாரியிடம் 7.5 கிலோ  தங்ககட்டி அபேஸ்
ஆம்னி பேருந்தில் சென்னை வந்த வியாபாரியிடம் 7.5 கிலோ தங்ககட்டி அபேஸ்

சென்னை: மதுரையி்ல் இருந்து சென்னை வந்த பேருந்தில் நகை வியாபாரியிடம் 7.5 கிலோ தங்ககட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

##~~##
ராஜஸ்தானை சேர்ந்த சம்பாலால் 7.5 கிலோ தங்கக்கட்டிகளுடன் நேற்று மதுரையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்தில் வந்துள்ளார்.
படுக்கை வசதிக் கொண்ட அந்த பேருந்தில் அமர்ந்த சம்பாலால் நன்றாக தூங்கி விட்டார். இன்று காலை ஆம்னி பேருந்து சென்னை கோயம்பேடு வந்தடைந்தது.
பேருந்தை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் பேருந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது, சம்பாலால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ஊழியர்கள் அவரை எழுப்பியுள்ளனர்.
தூக்கத்தி்ல் இருந்து விழித்த சம்பாலால், தான் வைத்திருந்த பை அறுக்கப்பட்டு அதில் இருந்த தங்ககட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக, சென்னை என்எல்சி போஸ் சாலையில் நகைக்கடை வைத்துள்ள சுரேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அவர் கோயம்பேட்டிற்கு விரைந்து வந்தார். கொள்ளைபோன தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் 2.30 கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து சம்பாலால் கோயம்பேடு காவல்துறையினர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.