Published:Updated:

குடை இல்லை... கூலிங் கிளாஸ் இல்லை - புலம்பும் போக்குவரத்து போலீஸ்

குடை இல்லை... கூலிங் கிளாஸ் இல்லை - புலம்பும் போக்குவரத்து போலீஸ்
குடை இல்லை... கூலிங் கிளாஸ் இல்லை - புலம்பும் போக்குவரத்து போலீஸ்

புதுக்கோட்டை: வெய்யிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையிலும் இரவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உதவியாகவும் போக்குவரத்து போலீசாருக்கு கூலிங் கிளாஸ், ரெயின் கோட் ம‌ற்றும் ஒளிரும் சிக்னல் விளக்குகளை வழங்கி  வருகிறது அரசு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இவைகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி விட்டார்களாம்.

##~~##
இதற்காக தனியாக நிதி ஒதுக்கப்பட்டாலும் அந்த நிதியை அதிகாரிகளின் ஆடம்பர செலவினங்களுக்கு திருப்பி விடுவதாக கண்ணைக் கசக்குகிறார்கள் மழையில் நனைந்து வெயிலில் காயும் போக்குவ்ரத்து போலீஸார்.
போக்குவரத்து போலீஸார் ஒதுங்கி நிற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த நிழல் குடைகளும் பெரும்பாலான இடங்களில் காணாமல் போய்விட்டன. இதனால் கொளுத்தும் வெய்யிலில் தகித்துக் கொண்டிருக்கிறார்கள் போக்குவரத்து போலீஸார்.
காவல்துறை முதல்வர் கையில் இருந்துமா இப்படி?

 வீ.மாணிக்கவாசகம்