Published:Updated:

தேனியை மிரட்டும் மன்மத எஸ்.ஐ.க்கள்

தேனியை மிரட்டும் மன்மத எஸ்.ஐ.க்கள்
தேனியை மிரட்டும் மன்மத எஸ்.ஐ.க்கள்

தேனி: தேனி மாவட்ட போலீஸில் மன்மத போலீஸார் இரண்டு பேர் ஆபாச படங்களை எஸ்.எம்.எஸ். அனுப்பி ஆபத்தில் சிக்கி இருக்கிறார்கள்.

தேனி மாவட்டம் கூடலூர் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக இருந்த கடவுள் புள்ளி ஒருவர், விசாரணைக்குப் போன இடத்தில், புகார் கொடுத்த பெண்ணிடம் தனது மொபைல் நம்பரை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அந்தப் பெண் ஏதோ தகவல் சொல்வதற்காக எஸ்.ஐ.யை தொடர்புகொள்ள, அதிலிருந்து அடிக்கடி அந்தப் பெண்ணுக்கு போனைப் போட்டு வழிந்திருக்கிறார் எஸ்.ஐ.

ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பும் அளவுக்கு போயிருக்கிறது எஸ்.ஐ.யின் டார்ச்சர். அந்தப் படங்களை கவனித்துவிட்ட அந்தப் பெண்ணின் சகோதரர்கள், செல்போனும் கையுமாய் வந்து எஸ்.ஐ.யின் சட்டையை பிடித்திருக்கிறார்கள். விஷயம் தெரிந்து அங்கே ஏகத்துக்கும் கூட்டம் கூடி ஸ்டேஷனை அட்டாக் பண்ணுமளவுக்கு நிலைமை சீரியஸாகி இருக்கிறது.

##~~##
இந்தத் தகவல் மாவட்ட உயரதிகாரிக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் புகாரை வாங்கி எஸ்.ஐ. மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாராம். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்  தரப்பிலிருந்து புகார் கொடுக்க முன் வராததால் எஸ்.ஐ. தலை தப்பிய‌து. ஆனாலும், மன்மத எஸ்.ஐ.யை அங்கிருந்து உடனடியாக வேறு ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டிருக்கிறார்கள்.
இதேபோல் கம்பம் ஸ்டேஷன் எஸ்.ஐ. ஒருவரும் காமரசமாய் பேசி பெண்களுக்கு வலை வீசுவதாக எஸ்.பி.க்கு தகவல் போயிருக்கிறது. அவரை அப்போதே விடுப்பில் அனுப்பி வைத்திருக்கிறார் எஸ்.பி. அந்த விடுப்பு முடிந்து இப்போது மீண்டும் அதே ஸ்டேஷனில் கடமையை (!?) தொடர்கிறார் அந்த எஸ்.ஐ.
-குளஸ்