Published:Updated:

தர்மபுரியில் 25 போலி டாக்டர்கள் சிக்கினர் !

தர்மபுரியில் 25 போலி டாக்டர்கள் சிக்கினர் !
தர்மபுரியில் 25 போலி டாக்டர்கள் சிக்கினர் !
தர்மபுரியில் 25 போலி டாக்டர்கள் சிக்கினர் !

தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 25 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் போலி டாக்டர்கள் குறித்து காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஏழை, எளிய மக்களை ஏமாற்றி இவர்கள் பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

##~~##
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் அதியமான்கோட்டை, தொப்பூர், காரி மங்கலம், ஆரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர் உள்ளிட்ட இடங்களில் 3 பெண்கள் உட்பட 25 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நடத்தி வந்த மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏராளமான மருந்து, மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.