Published:Updated:

விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்: பொதுமக்கள் மறியல், போலீஸ் தடியடி

விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்: பொதுமக்கள் மறியல், போலீஸ் தடியடி
விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்: பொதுமக்கள் மறியல், போலீஸ் தடியடி

சென்னை: விசாரணைக்கு அழைத்து சென்றவரை காவல்துறையினர் அடித்துக் கொன்றதாக கூறி பூந்தமல்லி-மதுரவாயல் நெடுஞ்சாலையி்ல் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

##~~##
சென்னை வானகரம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கதிரவன் மீது பெண் ஒருவர் கொடுத்த  புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், கதிரவன் இறந்துவிட்டதாக அவரது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள், காவல்துறையினர்தான் கதிரவனை அடித்து கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டி உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
இதனிடையே, கதிரவன் சாவுக்கு காரணமாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் வானகரத்தில் உள்ள மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நின்றதால் காவல்துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
காவல்துறையினரின் இந்த தடியடியால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.