Published:Updated:

கூடங்குளம் அருகே பொதுமக்கள் - போலீஸ் மோதல்; கண்ணீர் புகை குண்டு வீச்சு!

கூடங்குளம்: கூடங்குளம் அருகே கூட்டப்புளியில் நடைபெற்ற போலீஸ் கொடி அணிவகுப்பின்போது பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டதால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.இதனால் அங்கு  பதற்றம் நிலவுகிறது.

கூடங்குளம் அணு உலைக்கு அருகில் உள்ள செட்டிக்குளத்தில், விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பை நாளை முற்றுகையிடப்போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

செட்டிக்குளத்திற்கு கூட்டப்புளி கிராமம் வழியாகத்தான் வரவேண்டும் என்பதால், இன்று மாலை கூட்டப்புளியில் அதிவேக அதிரடிப்படை போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.வழக்கமாக இதுபோன்ற அணி வகுப்புகள் கடற்கரையையொட்டிய பகுதிகளில் மட்டுமே நடத்தப்படும். ஆனால் இந்த முறை கூட்டப்புளி கிராமத்திற்குள்ளேயே போலீசார் அணி வகுத்து சென்றனர்.

##~~##
இதற்கு அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்குமிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து கலவரத்தைக் கட்டுப்படுத்த முதலில் போலீஸார் லத்தி சார்ஜ் செய்தனர். பதிலுக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து கற்கள் வீசப்பட்டதால், கூட்டத்தை கலைக்க ஐந்து முறை கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன இந்த மோதலில் இரண்டு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கூட்டப்புளியில் பதற்றம் நிலவுகிறது.