Published:Updated:

காஞ்சிபுரம் அருகே ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

காஞ்சிபுரம் அருகே  ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
காஞ்சிபுரம் அருகே ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பெண்ணை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை போலீஸார் இன்று என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த புஞ்சரதாங்கல் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இன்று மதியம் 1.30 மணி அளவில் தனது பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார்.அதற்குள் அவரது வீட்டிற்குள் சென்று பதுங்கியிருந்த யுவராஜா மற்றும் கமல்நாத் ஆகிய 2 ரவுடிகள் மஞ்சுளாவை உள்ளே தள்ளி, அவரை பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

முகத்தை போர்வையால் போர்த்தி இருவரும் கடுமையாக தாக்க, வலி பொறுக்க முடியாமல் மஞ்சுளா அலறினார்.இதனையடுத்து அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உள்ளே செல்ல அஞ்சி கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, இது குறித்து சில அடி தூரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு வந்து மஞ்சுளாவை மீட்க முயன்றபோது, இருவரும் அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், காவலர்கள் இருவரும் தங்களிடமிருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் இரண்டு ரவுண்டுகள் சுட்டதாக தெரிகிறது.

இதில் யுவராஜா சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.கமல்நாத் காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.இதனைத் தொடர்ந்து காயமுற்ற மஞ்சுளா மற்றும் கமல்நாத் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

காஞ்சிபுரம் அருகே  ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
காஞ்சிபுரம் அருகே  ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

இந்நிலையில், நகைகளை கொள்ளையடிக்க வந்ததாக மஞ்சுளா தெரிவித்தாலும், காவல்துறையினர் வேறுகோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழில் போட்டி காரணமாக உள்ளூர் சாராய வியாபாரி ஒருவரால், மஞ்சுளாவின் கணவர் கிருஷ்ணனுனம், அதன்பின்னர் சில நாட்கள் கழித்து கிருஷ்ணனின் தம்பியும் கொல்லப்பட்டனர்.

இதனால் கிருஷ்ணனின் இன்னொரு தம்பியான பெருமாள் என்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்தான் இன்று மஞ்சுளாவை காப்பாற்றியுள்ளனர்.இதனால் இந்த தாக்குதல் மஞ்சுளாவை கொல்ல நடந்த முயற்சிதான் என காவல்துறையின் மற்றொரு தகவல் கூறுகிறது.

படங்கள்: கிருபாகரன்